பொது செய்தி

இந்தியா

தமிழகம் உட்பட 8 மாநிலங்களில் வேகமாக பரவுகிறது கொரோனா

Added : ஏப் 03, 2021
Share
Advertisement
புதுடில்லி : தமிழகம் உள்ளிட்ட எட்டு மாநிலங்களில், கொரோனா வைரஸ் பரவல் வேகம், கடுமையாக அதிகரித்து உள்ளது. கடந்த, 24 மணி நேரத்தில் கண்டறியப்பட்ட பாதிப்பில், 81.42 சதவீதம், இம்மாநிலங்களில் பதிவாகி உள்ளது. மத்திய சுகாதார அமைச்சகம், நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழகம், மஹாராஷ்டிரா, கர்நாடகா, சத்தீஸ்கர்,டில்லி, உத்தர பிரதேசம், பஞ்சாப் மற்றும் மத்திய

புதுடில்லி : தமிழகம் உள்ளிட்ட எட்டு மாநிலங்களில், கொரோனா வைரஸ் பரவல் வேகம், கடுமையாக அதிகரித்து உள்ளது.

கடந்த, 24 மணி நேரத்தில் கண்டறியப்பட்ட பாதிப்பில், 81.42 சதவீதம், இம்மாநிலங்களில் பதிவாகி உள்ளது. மத்திய சுகாதார அமைச்சகம், நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழகம், மஹாராஷ்டிரா, கர்நாடகா, சத்தீஸ்கர்,டில்லி, உத்தர பிரதேசம், பஞ்சாப் மற்றும் மத்திய பிரதேசம் ஆகிய எட்டு மாநிலங்களில், கொரோனா பரவல் மிக அதிகமாக உள்ளது.கடந்த, 24 மணி நேரத்தில், 89 ஆயிரத்து, 129 பேரிடம் வைரஸ் பாதிப்பு உறுதியானது. இவர்களில், 81.42 சதவீதம் பேர், இம்மாநிலங்களை சேர்ந்தவர்கள்.வைரஸ் பாதிப்பிற்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை, 6.59 லட்சமாக உள்ளது.

இவர்களில், 77.3 சதவீதம் பேர், மஹாராஷ்டிரா, கர்நாடகா, சத்தீஸ்கர், கேரளா மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் உள்ளனர்.மஹாராஷ்டிராவில் மட்டும், சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை, கடந்த இரண்டு மாதங்களில், ஒன்பது மடங்கு அதிகரித்துள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் குறித்து, மாநில தலைமைச் செயலர்கள், போலீஸ் டி.ஜி.பி.,க்களுடன், மத்திய அமைச்சரவை செயலர் ராஜிவ் கவுபா, நேற்று முன்தினம்ஆய்வு கூட்டம் நடத்தினார்.அப்போது, வைரஸ் பரவல் வேகம் மிக அதிரித்துள்ள, 11 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில், உடனடி தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள உத்தரவிட்டார்.

'பரிசோதனைகளை அதிகரித்தல், கொரோனா பாதுகாப்பு விதிகளை கண்டிப்பாக பின்பற்றுதல், பரவல் வேகத்தை தடுத்தல் உள்ளிட்ட வழிமுறைகளை, அவர்கள் தீவிரமாக கடைப்பிடிக்க வேண்டும்' என, ராஜிவ் கவுபா கேட்டுக் கொண்டார்.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.89 ஆயிரம் பேர் பாதிப்புநாடு முழுதும், கடந்த, 24 மணி நேரத்தில், 89 ஆயிரத்து, 129 பேர், கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு உள்ளாயினர்; இது, கடந்த ஆறு மாதங்களில், ஒரே நாளில் பதிவான அதிகபட்ச பாதிப்பு. இவர்களுடன், வைரஸ் பாதிப்பிற்கு உள்ளானோர் எண்ணிக்கை, 1.23 கோடியை கடந்துள்ளது.

இவர்களில், ஒரு கோடியே, 15 லட்சத்து, 69 ஆயிரத்து, 241 பேர் குணமடைந்து உள்ளனர். நேற்று ஒரே நாளில், மஹாராஷ்டிராவில், 481 பேர் உட்பட, 714 பேர் பலியாயினர். இதனால், நாட்டின் கொரோனா பலி எண்ணிக்கை, 1.64 லட்சத்தை கடந்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X