வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை அ.ம.மு.க., வேட்பாளர் வாக்குறுதி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை அ.ம.மு.க., வேட்பாளர் வாக்குறுதி

Added : ஏப் 03, 2021
Share
விழுப்புரம்: வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என அ.ம.மு.க., வேட்பாளர் பாலசுந்தரம் பேசினார்.விழுப்புரம் சட்டசபை தொகுதியில் போட்டியிடும் அ.ம.மு.க., வேட்பாளர் பாலசுந்தரம் நேற்று விழுப்புரம் விஸ்வகர்மா திருமண மண்டபத்தில், நகை செய்யும் தொழிலாளர்களை சந்தித்து ஆதரவு திரட்டினார்.அப்போது, அவர் பேசுகையில் விழுப்புரத்தில் நகை தொழிலாளர்களுக்கு சிறப்பு நகை

விழுப்புரம்: வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என அ.ம.மு.க., வேட்பாளர் பாலசுந்தரம் பேசினார்.விழுப்புரம் சட்டசபை தொகுதியில் போட்டியிடும் அ.ம.மு.க., வேட்பாளர் பாலசுந்தரம் நேற்று விழுப்புரம் விஸ்வகர்மா திருமண மண்டபத்தில், நகை செய்யும் தொழிலாளர்களை சந்தித்து ஆதரவு திரட்டினார்.அப்போது, அவர் பேசுகையில் விழுப்புரத்தில் நகை தொழிலாளர்களுக்கு சிறப்பு நகை தொழிற்பேட்டை அமைக்கப்படும். வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும். பொறியியல் மாணவர்களுக்கு ரூ.2.50 லட்சம் கடனுதவி வழங்கப்படும். 60 நாட்களில் மின் இணைப்பு வழங்கப்படும் என்றார்.அப்போது, அ.ம.மு.க., நகர செயலாளர்கள் நாகராஜசோழன், சக்திவேல்முருகன், மாவட்ட பிரதிநிதி வீரமணி, இளைஞர் பாசறை கார்த்திகேயன், விஸ்வகர்மா ஆபரண தொழிலாளர் சங்க தலைவர் ரத்தினம், துணை தலைவர் சீனுவாசன், எம்.கே.டி., மன்ற தலைவர் ஆதவன்முத்து மற்றும் தே.மு.தி.க., நகர செயலாளர் மணிகண்டன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X