தி.மு.க., வேட்பாளர் புகழேந்தி பைக்கில் சென்று ஓட்டு சேகரிப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தி.மு.க., வேட்பாளர் புகழேந்தி பைக்கில் சென்று ஓட்டு சேகரிப்பு

Added : ஏப் 03, 2021
Share
விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி தொகுதி தி.மு.க., வேட்பாளர் புகழேந்தி பைக்கில் சென்று ஓட்டு சேகரித்தார்.விக்கிரவாண்டி தொகுதி தி.மு.க., வேட்பாளர் புகழேந்தி நேற்று விக்கிரவாண்டி பேரூராட்சி பகுதியில் தி.மு.க., உள்ளிட்ட கூட்டணி கட்சியினருடன் பைக்கில் ஊர்வலமாக சென்று உதயசூரியன் சின்னத்திற்கு ஓட்டு சேகரித்தார்.அப்போது விழுப்புரம் மாவட்ட கைவினைஞர் முன்னேற்ற கட்சி சார்பில்

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி தொகுதி தி.மு.க., வேட்பாளர் புகழேந்தி பைக்கில் சென்று ஓட்டு சேகரித்தார்.விக்கிரவாண்டி தொகுதி தி.மு.க., வேட்பாளர் புகழேந்தி நேற்று விக்கிரவாண்டி பேரூராட்சி பகுதியில் தி.மு.க., உள்ளிட்ட கூட்டணி கட்சியினருடன் பைக்கில் ஊர்வலமாக சென்று உதயசூரியன் சின்னத்திற்கு ஓட்டு சேகரித்தார்.அப்போது விழுப்புரம் மாவட்ட கைவினைஞர் முன்னேற்ற கட்சி சார்பில் உதயசூரியனுக்கு ஓட்டு கேட்டு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது.கைவினைஞர் முன்னேற்ற கட்சி மாநில அமைப்பாளர் உமாபதி, உயர்நிலைக் குழு உறுப்பினர் சூரியமூர்த்தி, தி.மு.க., மாவட்ட தலைவர் ஜெயச்சந்திரன், ஒன்றிய செயலாளர்கள் வேம்பி ரவி, ரவிதுரை, நகர செயலாளர் நைனாமுகமது, நகர தலைவர் தண்டபாணி, முன்னாள் சேர்மன்கள் அப்துல் சலாம், மலர்மன்னன், முன்னாள் துணை சேர்மன் சர்க்கார் பாபு, மாவட்ட துணை அமைப்பாளர்கள் பாபுஜீவானந்தம், முரளி , பாலாஜி, மாவட்ட பிரதிநிதிகள் திலகர், சந்தானம் , வெங்கடேசன் , வர்த்தகரணி சித்திரைவேல், தொழில் நுட்ப அணி பாலாஜி, ரகுபதி, இன்ஜினியர் இஸ்மாயில், இளைஞரணி நகர செயலாளர் கார்த்தி, வார்டு செயலாளர் வீரவேல், மாணவரணி யுவராஜ், முன்னாள் கவுன்சிலர்கள் கண்ணன், பாலு, பாண்டியன், பூபாலன், நந்திவாடி பார்த்தசாரதி கலந்து கொண்டனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X