அரசியல் செய்தி

தமிழ்நாடு

'தி.மு.க., - காங்., குடும்ப அரசியல் ஒழிந்தால் தான் தமிழகம் முன்னேறும்'

Updated : ஏப் 05, 2021 | Added : ஏப் 03, 2021 | கருத்துகள் (27)
Share
Advertisement
சென்னை:''தி.மு.க., - காங்., குடும்ப அரசியலை அகற்றும் போதுதான், தமிழகம் முன்னேற்ற பாதையை நோக்கி செல்லும்,'' என, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, நேற்று முன்தினம் இரவு, சென்னை வந்தார். அன்றிரவு, துறைமுகம் தொகுதிக்கு சென்றபோது, பிரசார நேரம் முடிந்துவிட்டதால், பா.ஜ., வேட்பாளர் வினோஜ் பி.செல்வத்தின், தேர்தல் பணிமனையை
 'தி.மு.க., - காங்., குடும்ப அரசியல் ஒழிந்தால் தான் தமிழகம் முன்னேறும்'

சென்னை:''தி.மு.க., - காங்., குடும்ப அரசியலை அகற்றும் போதுதான், தமிழகம் முன்னேற்ற பாதையை நோக்கி செல்லும்,'' என, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, நேற்று முன்தினம் இரவு, சென்னை வந்தார். அன்றிரவு, துறைமுகம் தொகுதிக்கு சென்றபோது, பிரசார நேரம் முடிந்துவிட்டதால், பா.ஜ., வேட்பாளர் வினோஜ் பி.செல்வத்தின், தேர்தல் பணிமனையை பார்வையிட்டு சென்றார்.

பின், அமித் ஷா, கிண்டியில் உள்ள ஓட்டலில் தங்கினார். ஆயிரம் விளக்கு தொகுதி பா.ஜ., வேட்பாளர் குஷ்புவை ஆதரித்து, தேனாம்பேட்டை, எல்லை அம்மன் கோவில் அருகில் இருந்து துவங்கிய, பிரமாண்ட பிரசார பேரணியில், அமித் ஷா, பங்கேற்றார்.அமித் ஷாவை வரவேற்கும் வகையில், சாலையின் இரு புறமும், பிரதமர் நரேந்திர மோடி, அமித் ஷா, பா.ஜ., தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, மறைந்த முதல்வர் ஜெயலலிதா, முதல்வர் பழனிசாமி., துணை முதல்வர் பன்னீர்செல்வம்., ஆகியோரின், 'கட் அவுட்'கள் வைக்கப்பட்டிருந்தன.

மைக்கேல் என்ற, 'மிமிக்ரி' கலைஞர், ஜெயலலிதா, எம்.ஜி.ஆர்., உள்ளிட்ட தலைவர்களின் குரல்களில் பேசி, தாமரை சின்னத்திற்கு ஓட்டு கேட்டார். அ.தி.மு.க.,வின் சைதை தொகுதி வேட்பாளர் சைதை துரைசாமி, வேளச்சேரி - அசோக், கொளத்துார் - ஆதிராஜாராம், சோழிங்கநல்லுார் - கந்தன், எழும்பூர் தொகுதியின் அ.தி.மு.க., கூட்டணி வேட்பாளர் ஜான் பாண்டியன் ஆகியோர், அமித் ஷாவை வரவேற்றனர்.

அமித் ஷா, பேரணியில் பங்கேற்பதற்காக, அங்கு அலங்கரிக்கப்பட்டு நிறுத்தப்பட்டிருந்த திறந்த வேனில் ஏறியதும், வேட்பாளர்களும் உடன் ஏறினர்.வேனில், அமித் ஷா அருகில், குஷ்பு உள்ளிட்ட வேட்பாளர்கள் நின்றிருந்தனர். மக்களை பார்த்து வணக்கம் கூறியும், கைகளை அசைத்தும், அமித் ஷா, ஓட்டு சேகரித்தபடி சென்றார். இந்நிகழ்ச்சியில், பா.ஜ., - அ.தி.மு.க., உள்ளிட்ட கட்சிகளின், பல ஆயிரம் தொண்டர்கள் பங்கேற்றனர்.

பின், அமித் ஷா, நிருபர்களிடம் கூறியதாவது:தி.மு.க., - காங்கிரஸ் குடும்ப அரசியலை அகற்றும் போது தான், தமிழகம் முன்னேற்ற பாதையை நோக்கி செல்லும். அப்போது தான், ஜெயலலிதாவின் கனவை நிறைவேற்ற முடியும். தமிழகத்தின் முன்னேற்ற நடவடிக்கையில், முதல்வர் பழனிசாமி., துணை முதல்வர் பன்னீர்செல்வம்., ஆகியோர் சிறப்பாக செயலாற்றி வருகின்றனர்.அவர்கள், கொரோனா பரவலை கட்டுப்படுத்த, சிறப்பாக செயல்பட்டனர்.

மத்திய அரசும், தமிழக அரசும், இரட்டை இன்ஜின்களாக செயல்பட்டு, தமிழகத்தை வளர்ச்சி பாதைக்கு அழைத்து செல்லும்.பெண்கள், வேலைவாய்ப்பு இல்லாத இளைஞர்கள், மீனவர்கள் என, அனைத்து தரப்பு மக்களுக்கும், பா.ஜ., மற்றும் அ.தி.மு.க., அரசால் மட்டுமே உதவ முடியும். மக்களையும், கலாசாரத்தையும் பாதுகாக்க முடியும்.

எனவே, வாக்காளர்கள், ஆயிரம் விளக்கு தொகுதி பா.ஜ., வேட்பாளர் குஷ்பு உட்பட, தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை, அமோகமாக வெற்றி பெற வைக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.


குஷ்பு பேசியதாவது:

அமித் ஷாவுக்கு எப்படி நன்றி கூறுவது என தெரியவில்லை. தேர்தல் நெருங்க நெருங்க, மக்களிடம் எழுச்சி காணப்படுகிறது. அவர்கள், பா.ஜ., வெற்றி பெற வாழ்த்துகளை கூறுகின்றனர். இறுதி கட்ட பிரசாரம் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.பெண்கள் முன்னேற வேண்டும் என்பதையே, அனைவரும் விரும்புகின்றனர். அ.தி.மு.க., ஆட்சியில், பெண்கள் பாதுகாப்பாக உள்ளனர். பிரதமர் நரேந்திர மோடி, பெண்கள் நலனுக்காக, பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். பா.ஜ., கூட்டணி வெற்றி பெறும்.இவ்வாறு, அவர் பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து (27)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
r.sundaram - tirunelveli,இந்தியா
04-ஏப்-202120:14:19 IST Report Abuse
r.sundaram அமித் ஷா அவர்கள் சொன்னது மிகவும் சரி. திமுக காரர்களாலேயே கருணாநிதி ஆட்சி அமைப்போம் என்று சொல்ல முடிய வில்லை, காரணம் சர்க்காரியா கமிசன் முடிவுகள், காவிரி விஷயங்கள், ஊழல் நடவடிக்கைகள் எல்லாமே. கருணாநிதி தன் குடும்பத்தை பேணினாரே அன்றி தமிழகத்தில் நலன் பேண வில்லை. மாறனுக்கு செழிப்பான மந்திரி பதவி வேணும் என்றபோது டெல்லிக்கு போக முடிந்த அவரால், இலங்கையில் தமிழர் படும் பாட்டை டெல்லியில் எடுத்துச்சொல்ல போக முடிய வில்லை. இன்னமும் காவிரி விஷயத்தில் தான் தப்பு செய்தது திமுகவுக்கு புரிய வில்லை. கருணாநிதியை விட ஸ்டாலின் மோசமானவராக தெரிகிறாரே தவிர தமிழக நலன் பேணும் ஆளாக தெரிய வில்லை, காரணம் ஸ்டாரிலைட், மீத்தேன், போன்ற விஷயங்கள். தான் அதிகாரத்தில் இருந்தபோது கொண்டுவந்த திட்டங்களையே தற்போது எதிர்க்கிறார். அவரின் அரசியல் முதிர்த்தசி அவ்வளவுதான். ஆதலால் திமுக தமிழகத்தில் ஆட்சிக்கு வந்தால் சீரழிவுதான். இவரை முன்னிலைப்படுத்தி மாறன் சகோதரர்கள் நல்ல சம்பாதிப்பார்கள். அதுதான் நடக்கும். குடும்ப ஆட்சி என்று இதத்தை கூறுகிறார் ஷா. தமிழக மக்கள்தான் விவரமாக இருக்க வேண்டும்.
Rate this:
Cancel
Elango - Kovai,இந்தியா
04-ஏப்-202117:02:24 IST Report Abuse
Elango சாமியார் வந்தார், ஒரே நாளில் வானதி கோவையில் ஆவுட்.... பாவம் குசுபு....
Rate this:
Cancel
Mirthika Sathiamoorthi - Sembawang,சிங்கப்பூர்
04-ஏப்-202116:35:06 IST Report Abuse
Mirthika Sathiamoorthi தமிழ்நாட்டிலே எந்த கிராமத்திலிருந்தும் எத்தனைமணிக்கும் எங்க வேணாலும் போகலாம். 1969 இல் 1500 பேருக்கு மேல் இருக்கும் எல்ல கிராமங்களுக்கும் உட்சாலைகள் போடப்பட்டாச்சு. சுப்ரீம் கோர்ட் மத்திய அரசை பாத்து சொல்லுச்சு உணவு குடோனில் இவளவு தானியங்கள் குவிஞ்சு கிடக்கே எடுத்து பள்ளிக்கூட புள்ளைங்களுக்கு தமிழ்நாடு மாதிரி சாப்பாடு போடுங்கடான்னு. எப்போ நாம் ஆரம்பிச்சு 25 வருஷம் கழிச்சு. அப்புறம்தான் அங்கே மத்திய உணவுத்திட்டம் வந்துச்சு. தமிழகத்தில் உள்ள ரேசன்கடைகளின் எண்ணிக்கை எவளவு தெரியுமா? 33000. ரேஷன் பயனீட்டாளர்கள் எவ்ளவு தெரியுமா? சர்க்கரை பருப்பு என்னைன்னு 90% பேர். தமிழகத்தில் மட்டுமே பொரளாதாரத்துடன் சமூக வளர்ச்சியும் நடந்திருக்கு எல்லோருக்கும் கல்வின்னு சாத்தியப்பட்டிருக்கு. இன்று இந்தயாவில் வெளிநாட்டில் வேலைக்கு போறவனில் ஐவரில் ஒருவன் தமிழன்..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X