விழுப்புரம்: விழுப்புரம் சட்டசபை தொகுதி தி.மு.க., வேட்பாளர் லட்சுமணன், மாட்டு வண்டியில் சென்று தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.விழுப்புரம் சட்டசபை தொகுதியில் தி.மு.க., சார்பில் வேட்பாளர் லட்சுமணன் போட்டியிடுகின்றார். இவர், நேற்று விழுப்புரம் அடுத்த பானாம்பட்டு, ஆனாங்கூர் உள்ளிட்ட பகுதிகளில் மாட்டு வண்டியில் சென்று தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.அப்போது, அவர் பேசுகையில், விழுப்புரம் மாவட்டத்தில், மலட்டாறு குறுக்கே 5 இடங்களில் பாலங்கள் கட்டப்படும். இதன் மூலம் அனைத்து ஏரிகளுக்கும் மழைநீர் சென்று, நிலத்தடி நீர்மட்டம் உயர நடவடிக்கை எடுக்கப்படும். விவசாயிகள் பயன்பெறும் வகையில் விழுப்புரத்தில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்படும் என்றார்.அப்போது, தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE