பொது செய்தி

இந்தியா

கின்னஸ் சாதனை படைக்க புறப்பட்ட ராணுவ வீரர்

Added : ஏப் 03, 2021
Share
Advertisement
ஜம்மு : தமிழகத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் வேலு, 'கின்னஸ்' சாதனை படைக்க, காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரையிலான, 'மாரத்தான்' ஓட்டத்தை துவக்கியுள்ளார். தமிழகத்தின் கிருஷ்ணகிரியைச் சேர்ந்தவரும், ராணுவ வீரருமான நாயக் வேலு, உதம்பூர் ராணுவ மருத்துவமனையில், உதவி செவிலியராக உள்ளார்.இவர், காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரி வரையிலான, 4,300 கி.மீ., துாரத்தை, 50 நாட்களில் ஓடி முடித்து,

ஜம்மு : தமிழகத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் வேலு, 'கின்னஸ்' சாதனை படைக்க, காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரையிலான, 'மாரத்தான்' ஓட்டத்தை துவக்கியுள்ளார்.

தமிழகத்தின் கிருஷ்ணகிரியைச் சேர்ந்தவரும், ராணுவ வீரருமான நாயக் வேலு, உதம்பூர் ராணுவ மருத்துவமனையில், உதவி செவிலியராக உள்ளார்.இவர், காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரி வரையிலான, 4,300 கி.மீ., துாரத்தை, 50 நாட்களில் ஓடி முடித்து, கின்னஸ் சாதனை படைக்க உள்ளார். இதையொட்டி, மார்ச், 31ம் தேதி, ஸ்ரீநகரில் இருந்து அவர் புறப்பட்டார். இது குறித்து, உதம்பூர் ராணுவ செய்தி தொடர்பாளர் அபினவ் நவ்நீத் கூறியதாவது:நாயக் வேலு, மணிக்கு, 10 கி.மீ., வேகத்தில் ஓடுவார். அவர், பல மாநிலங்கள், நகரங்கள் வழியே, ஒரு நாளைக்கு சராசரியாக, 70 - 100 கி.மீ., ஓடி, 50 நாட்களில், கன்னியாகுமரியை அடைவார்.

இடையில், 21ம் தேதி, தன், 30வது பிறந்தநாளை கொண்டாட உள்ளார். அவர், 2012ல், ராணுவத்தின் தடகள போட்டியில் தங்கப் பதக்கம் வென்றுள்ளார். அதன் பின், நீண்ட துாரம் ஓடும், 'மாரத்தான்' போட்டியில் கவனம் செலுத்தி, பல பதக்கங்களை வென்று, ராணுவத்திற்கு பெருமை சேர்த்துள்ளார். கடந்த, 2016 முதல், இந்திய தடகள கூட்டமைப்பில், இந்திய குழுவின் பிரதிநிதியாக செயல்பட்டு வருகிறார்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X