செஞ்சியை கல்வியில் மேம்பட்ட தொகுதியாக மாற்றுவேன்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

செஞ்சியை கல்வியில் மேம்பட்ட தொகுதியாக மாற்றுவேன்

Added : ஏப் 03, 2021
Share
செஞ்சி: செஞ்சி தொகுதியை கல்வியில் மேம்பட்ட தொகுதியாக மாற்றுவேன் என அ.ம.மு.க., வேட்பாளர் கவுதம் சாகர் கூறியுள்ளார்.இதுகுறித்து அவர் கூறியதாவது:ஏழை எளிய விவசாயிகள், கால்நடை வளர்ப்பவர்கள் செஞ்சி தொகுதியில் அதிகம் உள்ளனர். இவர்களின் வாழ்க்கை தரம் உயர, அவர்களின் பிள்ளைகளுக்கு இலவச உயர் கல்வி கிடைக்க வேண்டும். இதுவரை இதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இருக்கும்

செஞ்சி: செஞ்சி தொகுதியை கல்வியில் மேம்பட்ட தொகுதியாக மாற்றுவேன் என அ.ம.மு.க., வேட்பாளர் கவுதம் சாகர் கூறியுள்ளார்.இதுகுறித்து அவர் கூறியதாவது:ஏழை எளிய விவசாயிகள், கால்நடை வளர்ப்பவர்கள் செஞ்சி தொகுதியில் அதிகம் உள்ளனர். இவர்களின் வாழ்க்கை தரம் உயர, அவர்களின் பிள்ளைகளுக்கு இலவச உயர் கல்வி கிடைக்க வேண்டும். இதுவரை இதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இருக்கும் பள்ளிகளுக்கு கட்டடம் கட்டி தந்ததையே ஆளும் கட்சி சாதனையாக கூறி வருகிறது. நான் வெற்றி பெற்றால் முதல் கடமையாக அரசு கல்லுாரியை கொண்டு வருவேன்.செஞ்சியின் வரலாற்று பெருமை உலகறிய செய்ய முதலில் செஞ்சியை சுற்றுலா மையமாக அறிவிக்க செய்வதுடன், வாய்ப்புள்ள இடத்தில் படகு சவாரியும், பூங்காக்களும் அமைக்கப்படும். செஞ்சி பகுதியில் கண்டெடுக்கப்பட்டுள்ள வரலாற்று சின்னங்களையும், செஞ்சியின் வரலாற்றை விளக்கும் படங்களுடன் கூடிய அருங்காட்சியாகம் அமைக்கப்படும்.செஞ்சி நகர சாலைகள் அகலப்படுத்தி, சாலை நடுவில் மின் விளக்கு அமைத்து நகரை அழகுப்படுத்தப்படும். செஞ்சி கோட்டை அருகே நுழைவு வாயிலும், ராஜா தேசிங்கு சிலை அமைக்கப்படும். ராஜா தேசிங்கு நினைவிடத்தில் மணி மண்டபமும், பூங்காவும் அமைக்கப்படும்.மேல்மலையனுார் அங்காளம்மன் கோவில் ஆன்மிக சுற்றுலா தலமாக உயர்த்தி நடவடிக்கை எடுத்து அங்கு வரும் பக்தர்களுக்கு குடிநீர், தங்கும் வசிதி, கழிப்பிட வசதிகள் முதன்மை தரத்துடன் செய்யப்படும். மேல்மலையனுார், அவலுார்பேட்டை ஊராட்சிகளை பேரூராட்சியாக தரம் உயர்த்தப்படும். கழிவுநீர் தேக்கமாக மாறி வரும் மேல்மலையனுார் ஏரியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, ஏரியை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும். தொகுதியில் உள்ள அரசு புறம்போக்கு இடங்களை தேர்வு செய்து, அதில் மகளிர் சுய உதவி குழுவினரை கொண்டு பழத்தோட்டங்களை உருவக்கி பெண்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்கப்படும்.மாணவிகள் அரசு போட்டி தேர்வுகளை எழுத எனது சொந்த செலவில் இலவச பயிற்சி மையம் உருவக்கப்படும். விவசாயிகளின் குறைகளை தீர்க்க மார்க்கெட் கமிட்டியில் மாதம் தோறும் குறைக் கேட்பு கூட்டம் நடத்தப்படும். விவசாயிகளின் பிரச்னைகளில் விரைவான நடவடிக்கை எடுக்கப்படும். சங்கராபரணி ஆற்றில் கலக்கும் கழிவு நீர் சுத்திகரிக்கப்படும், தேவையான இடங்களில் தடுப்பணை கட்டப்படும்.அரசு மருத்துவமனை முழு திறத்துடன் செயல்பட நடவடிக்கை எடுக்கப்படும். செஞ்சியில் 24 மணி நேரமும் எம்.எல்.ஏ., அலுவலகம் தொகுதி மக்களின் வசதிக்காக இயங்கும். இந்த அலுவலகத்தின் மூலம் தகுதி உள்ள அனைவருக்கும் முதியோர் உதவி தொகை, விதவைகளுக்கான உதவி தொகை, கல்வி கடன் பெற நடவடிக்கை எடுப்பேன். நானும் மக்களின் ஒருவன் என்பதை எனது பதவி காலம் முழுவதும் உணர்ந்து செயல்படுவேன். மக்கள் பணி செய்ய எனக்கு வாய்ப்பு தாருங்கள்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X