பொது செய்தி

இந்தியா

பொதுக்கூட்டங்களுக்கு தடை தேர்தல் கமிஷன் உத்தரவு

Added : ஏப் 03, 2021
Share
Advertisement
திருவனந்தபுரம் : கேரளாவில், கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, அரசியல் கட்சிகள் இன்று நடத்த இருந்த பொதுக்கூட்டங்களுக்கு தடை விதித்து, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. கேரளாவில், முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான, இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. இங்கு, 140 தொகுதிகளை உள்ளடக்கிய சட்டசபைக்கு, நாளை மறுநாள், ஒரே கட்டமாக தேர்தல் நடக்க உள்ளது. இன்றுடன் தேர்தல்

திருவனந்தபுரம் : கேரளாவில், கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, அரசியல் கட்சிகள் இன்று நடத்த இருந்த பொதுக்கூட்டங்களுக்கு தடை விதித்து, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.

கேரளாவில், முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான, இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. இங்கு, 140 தொகுதிகளை உள்ளடக்கிய சட்டசபைக்கு, நாளை மறுநாள், ஒரே கட்டமாக தேர்தல் நடக்க உள்ளது. இன்றுடன் தேர்தல் பிரசாரம் நிறைவடைய உள்ளது. இதனால், இறுதிக்கட்ட பிரசாரங்களில், அரசியல் கட்சி தலைவர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதற்கிடையே, மாநிலத்தில், கொரோனா வைரசால் பதிவாகும் தினசரி பாதிப்புகளின் எண்ணிக்கை, தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

பிரசாரத்தின் இறுதி நாளில், அனைத்து பிரதான அரசியல் கட்சிகளும், பெரிய அளவிலான பொதுக்கூட்டங்கள், பேரணிகளை நடத்தி, பிரசாரத்தை நிறைவு செய்வதை வழக்கமாக வைத்துள்ளன. பொதுக்கூட்டத்திற்காக மக்கள் ஒன்றுகூடினால், வைரஸ் பரவல் வேகமெடுக்கும் என, அஞ்சப்படுகிறது. எனவே, இதற்கு தடை விதிக்கக்கோரி, தேர்தல் கமிஷனுக்கு மாநில தலைமை தேர்தல் அதிகாரி, நேற்று கடிதம் அனுப்பிவைத்தார். அவரது கோரிக்கையை ஏற்று, கேரளாவில், இன்று திறந்தவெளியில் நடத்தப்பட இருந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டங்கள் மற்றும்பேரணிகளுக்கு தடை விதித்து, தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. தேர்தல் பிரசாரத்திற்காக நடத்தப்படும் இரு சக்கர பேரணிகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X