தொகுதி பிரச்னைகளை தீர்ப்பேன் அ.ம.மு.க., வேட்பாளர் உறுதி | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தொகுதி பிரச்னைகளை தீர்ப்பேன் அ.ம.மு.க., வேட்பாளர் உறுதி

Added : ஏப் 03, 2021
Share
விக்கிரவாண்டி: அனைத்து சமுதாய மக்களுக்கும் பொதுவானவனாக செயல்படுவேன் என விக்கிரவாண்டி தொகுதி அ.ம.மு.க., வேட்பாளர் அய்யனார் கூறி ஓட்டு கேட்டார்.விக்கிரவாண்டி தொகுதி அ.ம.மு.க., வேட்பாளர் அய்யனார், நேற்று விக்கிரவாண்டி, முண்டியம்பாக்கம் பகுதியில் வீதி வீதியாக சென்று ஓட்டு கேட்டு பிரசாரம் செய்தார். பெரியகாலனியில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து அவர்

விக்கிரவாண்டி: அனைத்து சமுதாய மக்களுக்கும் பொதுவானவனாக செயல்படுவேன் என விக்கிரவாண்டி தொகுதி அ.ம.மு.க., வேட்பாளர் அய்யனார் கூறி ஓட்டு கேட்டார்.விக்கிரவாண்டி தொகுதி அ.ம.மு.க., வேட்பாளர் அய்யனார், நேற்று விக்கிரவாண்டி, முண்டியம்பாக்கம் பகுதியில் வீதி வீதியாக சென்று ஓட்டு கேட்டு பிரசாரம் செய்தார். பெரியகாலனியில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து அவர் பேசியதாவது:தொகுதியில் அனைத்து சமுதாய மக்களுக்கும் நான் பொதுவானவனாக இருந்து சிறப்பாக செயல்படுவேன். தொகுதி பிரச்னைகளுக்கு உடனடியாக தீர்வு காண்பேன் என உறுதி அளித்தார்.பிரசாரத்தில் தே.மு.தி.க., நகர செயலாளர் பாலாஜி, மாவட்ட துணை செயலாளர் சூடாமணி, ஒன்றிய செயலாளர்கள் காணை குமார், முருகன், விக்கிரவாண்டி ஜெயமூர்த்தி, ஞானசேகரன், தொண்டரணி சுகுமார், நகர தலைவர் திருநாவுக்கரசு, பொருளாளர் செல்வம், எஸ்.டி.பி.ஐ., தொகுதி தலைவர் முஸ்தாபா, துணைத் தலைவர்கள் அன்சர் அலி, சுலைமான், துணை செயலாளர்கள் ஜாபர், பாரூக், அ.ம.மு.க., ஒன்றிய செயலாளர்கள் விக்கிரவாண்டி கோதண்டபாணி, காணை சுபாஷ், ரமேஷ், நகர செயலாளர் சுரேஷ்குமார், மாணவரணி செயலாளர் முருகன், இளைஞரணி தலைவர் தமிழ்ச்செம்மல், நகர தலைவர் சையது அபுதாகிர், துணை செயலாளர்கள் பிச்சை முகமது, ஈஸ்வரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X