கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், பறக்கும் படை மற்றும் நிலை கண்காணிப்பு குழுக்கள் மூலம் இதுவரை ரூ.82 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து கலெக்டர் கிரண்குராலா விடுத்துள்ள செய்திகுறிப்பு;சட்டசபை தேர்தலையொட்டி, நன்னடத்தை விதிமுறைகள் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 24 மணி நேரமும் பறக்கும் படை மற்றும் நிலை கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு வாக்காளர்களுக்கு பணம், பரிசுப்பொருட்கள் மதுபானங்கள் விநியோகிப்பது, ரூ.50 ஆயிரத்திற்கு மேல் உரிய ஆவணமின்றி எடுத்து செல்லும் பணம் போன்றவை குறித்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, உளுந்துார்பேட்டை சட்டசபை தொகுதியில் 18 லட்சத்து 15 ஆயிரத்து 920 ரூபாய், ரிஷிவந்தியத்தில் 33 லட்சத்து 32 ஆயிரத்து 790 ரூபாய், சங்கராபுரத்தில் 17 லட்சத்து 11 ஆயிரத்து 590 ரூபாய், கள்ளக்குறிச்சியில் 13 லட்சத்து 40 ஆயிரத்து 500 ரூபாய் என 82 லட்சத்து 800 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.இதில், உரிய ஆவணங்கள் சமர்ப்பித்தவர்களிடம் உளுந்துார்பேட்டை தொகுதியில் 2 லட்சத்து 81 ஆயிரத்து 790 ரூபாய், சங்கராபுரத்தில் 7 லட்சத்து 25 ஆயிரத்து 350 ரூபாய், உளுந்துார்பேட்டையில் 210 கொடிகள், 95 டி ஷர்ட்டுகள் திருப்பி ஒப்படைக்கப்பட்டுள்ளன.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE