பொது செய்தி

தமிழ்நாடு

ஓட்டுச்சாவடி அலுவலர்கள் நியமனத்தில் குழப்பம் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆசிரியர்கள் விரக்தி

Added : ஏப் 03, 2021
Share
Advertisement
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், ஓட்டுச்சாவடி நிலைய அலுவலர்களை பணி ஒதுக்கீடு செய்வதில் ஏற்பட்ட குழப்பத்தால், ஆசிரியர்கள் விரக்தியடைந்துள்ளனர்.கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கள்ளக்குறிச்சி(தனி), சங்கராபுரம், ரிஷிவந்தியம், உளுந்துார்பேட்டை ஆகிய 4 சட்டசபை தொகுதிகளில் 1,569 ஓட்டுச்சாவடிகள் உள்ளன.தேர்தலையொட்டி ஒவ்வொரு ஓட்டுச்சாவடியிலும் பிஓ, பி1, பி2, பி3

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், ஓட்டுச்சாவடி நிலைய அலுவலர்களை பணி ஒதுக்கீடு செய்வதில் ஏற்பட்ட குழப்பத்தால், ஆசிரியர்கள் விரக்தியடைந்துள்ளனர்.கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கள்ளக்குறிச்சி(தனி), சங்கராபுரம், ரிஷிவந்தியம், உளுந்துார்பேட்டை ஆகிய 4 சட்டசபை தொகுதிகளில் 1,569 ஓட்டுச்சாவடிகள் உள்ளன.தேர்தலையொட்டி ஒவ்வொரு ஓட்டுச்சாவடியிலும் பிஓ, பி1, பி2, பி3 என 4 ஓட்டுச்சாவடி நிலைய அலுவலர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.தேர்தலின் போது, ஓட்டுச்சாவடி மையத்தின் முழு கண்காணிப்பும் பிஓ எனப்படும் ஓட்டுச்சாவடி அலுவலரின் கட்டுப்பாட்டில் இருக்கும். கல்லுாரி விரிவுரையாளர்கள், பள்ளி முதுகலை ஆசிரியர்கள், மூத்த பட்டதாரி ஆசிரியர்கள் பிஓ பணியில் ஈடுபடுவர்.அதேபோல், பி1 பொறுப்பில் பட்டதாரி ஆசிரியர்கள் பணியமர்த்தப்படுவர். வாக்களிக்க வரும் நபர்களின் பெயர்கள் மற்றும் பாலினத்தை வாசித்தல் உள்ளிட்ட பணிகளை பி1 ஊழியர்கள் செய்வர்.பி2 பொறுப்பில், அரசு இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் தகுதி வாய்ந்த அரசு ஊழியர்கள் பணியமர்த்தப்படுவர்.வாக்காளர்களின் ஆவணங்களை சரிபார்த்தல், கையெழுத்து பெறுதல், விரலில் மை வைத்தல் உள்ளிட்ட பணிகளை பி2 ஊழியர்கள் செய்வர். பி3 பொறுப்பில் அரசு கடைநிலை ஊழியர்கள் பணியமர்த்தப்படுவர்.பேலட் யூனிட் இயந்திரத்தில் பொத்தானை அழுத்துதல் உட்பட மற்ற பணிகளை பி3 ஊழியர்கள் மேற்கொள்வர். இதில் பி2, பி3 ஆகிய இரண்டு பொறுப்புகளில் உள்ளவர்களுக்கும் ஒரே ஊதியம் வழங்கப்படுகிறது.இந்த பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்களின் விண்ணப்பங்களை பெற்று, அலுவலர்களை பணி நியமனம் செய்வதில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.இதனால் பி2 பொறுப்பில் பணியாற்ற வேண்டிய அரசு ஆசிரியர்கள் மற்றும் தகுதி வாய்ந்த ஊழியர்கள் பி3 பொறுப்பிலும், பி3 பொறுப்பில் பணியாற்ற வேண்டிய கடைநிலை ஊழியர்கள் பி2 பொறுப்பிலும் மாற்றி பணியமர்த்தப்பட்டுள்ளனர்.மாவட்டத்தில் 400க்கும் மேற்பட்ட ஓட்டுச்சாவடிகளில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. தேர்தல் பணியில் அனுபவமில்லாத, கடை நிலை ஊழியர்களை தங்களது பொறுப்பில் பணியமர்த்தப்பட்டுள்ளதால், அரசு ஆசிரியர்கள் விரக்தி அடைந்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X