சாரதா மோசடி வழக்கு சொத்துக்கள் முடக்கம்| Dinamalar

சாரதா மோசடி வழக்கு சொத்துக்கள் முடக்கம்

Added : ஏப் 03, 2021
Share
புதுடில்லி : 'சாரதா சிட்பண்ட்' மோசடி வழக்கில் தொடர்புடைய திரிணமுல் காங்., கட்சித் தலைவர்களுக்கு சொந்தமான, 3 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை, அமலாக்கத் துறையினர் முடக்கி உள்ளனர்.மேற்கு வங்கத்தில், முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமுல் காங்., கட்சியின் ஆட்சி நடக்கிறது. இங்கு 2013ல், 'சாரதா சிட்பண்ட்' என்ற நிதி நிறுவனம், அதிக வட்டி தருவதாக கூறி மக்களை ஏமாற்றி,

புதுடில்லி : 'சாரதா சிட்பண்ட்' மோசடி வழக்கில் தொடர்புடைய திரிணமுல் காங்., கட்சித் தலைவர்களுக்கு சொந்தமான, 3 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை, அமலாக்கத் துறையினர் முடக்கி உள்ளனர்.மேற்கு வங்கத்தில், முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமுல் காங்., கட்சியின் ஆட்சி நடக்கிறது.

இங்கு 2013ல், 'சாரதா சிட்பண்ட்' என்ற நிதி நிறுவனம், அதிக வட்டி தருவதாக கூறி மக்களை ஏமாற்றி, பல கோடி ரூபாய் மோசடி செய்தது. நிறுவன இயக்குனர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக திரிணமுல் காங்., தலைவர்களிடமும், அமலாக்க துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்நிலையில், இந்த வழக்கில், திரிணமுல் காங்., தலைவர்களின் சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன.இது குறித்து, அமலாக்கத் துறை நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:சாரதா சிட்பண்ட் மோசடி வழக்கில் தொடர்புடைய திரிணமுல் காங்., செய்தித் தொடர்பாளர் குணால் கோஷ், கட்சியின் எம்.பி., சதாப்தி ராய், சாரதா குழுமத்தின் இயக்குனரான தேவ்ஜானி முகர்ஜி உள்ளிட்ட மூவருக்கும் சொந்தமான, 3 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X