பொது செய்தி

தமிழ்நாடு

வேலை ரெடி: கையேந்த வேண்டாம், இளைஞனே : 'டாலர் சிட்டி'யில், குவிந்துகிடக்கும் வாய்ப்பு:செய்ய வேண்டியதை மறந்த அரசியல் கட்சிகள்

Updated : ஏப் 04, 2021 | Added : ஏப் 03, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
திருப்பூர்:தேர்தல் அறிக்கையில், வேலைவாய்ப்புகளை அள்ளி வழங்குவதாக கூறும் அரசியல் கட்சிகள், திருப்பூரில் இளைஞர்களுக்கு கொட்டிக் கிடக்கும் வேலைவாய்ப்புகள் குறித்து மறந்து விடுகின்றன.தமிழகத்தில், 6.28 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இதில், முதன்முறையாக ஓட்டு போட போகும், 18 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்கள் மட்டும், ஏறத்தாழ, ஒன்பது லட்சம் பேர்.இவர்களது ஓட்டுக் களை அள்ளுவதற்கு,
வேலை ரெடி: கையேந்த வேண்டாம், இளைஞனே :  'டாலர் சிட்டி'யில், குவிந்துகிடக்கும் வாய்ப்பு:செய்ய வேண்டியதை மறந்த அரசியல் கட்சிகள்

திருப்பூர்:தேர்தல் அறிக்கையில், வேலைவாய்ப்புகளை அள்ளி வழங்குவதாக கூறும் அரசியல் கட்சிகள், திருப்பூரில் இளைஞர்களுக்கு கொட்டிக் கிடக்கும் வேலைவாய்ப்புகள் குறித்து மறந்து விடுகின்றன.

தமிழகத்தில், 6.28 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இதில், முதன்முறையாக ஓட்டு போட போகும், 18 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்கள் மட்டும், ஏறத்தாழ, ஒன்பது லட்சம் பேர்.இவர்களது ஓட்டுக் களை அள்ளுவதற்கு, கட்சிகள் ஆர்வம் காட்டுகின்றன. பா.ஜ., - காங்., உட்பட தேசிய கட்சிகளும், இளைஞர்களை கவர துடிக்கின்றன. படித்து வேலைதேடும் நிலையில் உள்ளவர்களாகவோ, வேலைக்கு புதிதாக செல்பவர்களாகவோ, மாணவர்களாகவோ, புதிய வாக்காளர்கள் இருப்பதற்கு வாய்ப்பு அதிகம்.இளைஞர்களின் எதிர் பார்ப்பில், பிரதானமானதாக, வேலைவாய்ப்பு இருக்கிறது. வேலைவாய்ப்பு குறித்து, கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. எப்போதுமே, வேலைவாய்ப்புகள் குறித்து, கட்சிகள் சொல்லும் வாக்குறுதிகள் கேட்பதற்கு கவர்ச்சிகரமானதாக தோன்றினாலும், செயல்பாடுகளில், பாதியளவு கூட உண்மையாக இருப்பதில்லை.


திருப்பூரின் யதார்த்தம்


திருப்பூரில், இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகள் குவிந்துகிடக்கின்றன. ஆனால், இங்குள்ள தொழில்துறைக்கேற்ப அவர்கள் தகுதியுடைய பணியாளர்களாக, உடனடியாக மாற முடிவதில்லை. கடின உழைப்புக்குப் பெயர் போன திருப்பூரில், சுறுசுறுப்பு மிக்க இளைஞர்களால் தான் தாக்குப்பிடிக்க முடிகிறது.இருபது லட்சம் தொழிலாளர் வரை திருப்பூருக்கு தேவை இருக்கிறது. ஆனால், இதில், பாதியளவுக்கு கூட, தொழிலாளர் இல்லை. படித்த இளைஞர்கள், தையல் உள்ளிட்ட பணிகளுக்கு வருவதற்கு தயக்கம் காட்டுகின்றனர். மேற்பார்வையாளர் போன்ற பணிகளில் ஈடுபடவே ஆர்வம் காட்டுகின்றனர். இதுவும் தொழிலாளர் பற்றாக்குறைக்கு காரணமாக இருக்கிறது.

'நிப்ட் டீ' கல்லுாரி மற்றும் தனியார் பயிற்சி நிறுவனங்கள் திருப்பூரில் அதிகம் உள்ளன. இருப்பினும் படிப்பை விட, அனுபவம் மற்றும் தொழில்நுட்ப அறிவு தான், இவர்களுக்கு பெரும்பாலும் கைகொடுக்கிறது.இந்த யதார்த்தத்தை, அரசியல் கட்சிகள் புரிந்து கொண்டால், திருப்பூரிலேயே பெருமளவு வேலைவாய்ப்புகளை தமிழக இளைஞர்களுக்கு வழங்க முடியும். இதற்கான ஊக்கத்தையும் ஒத்துழைப்பையும், தமிழக அரசு வழங்க முடியும்.


வெற்று முழக்கம்வேண்டாம்


இதற்கேற்ற செயல் திட்டங்கள், கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளில் காண முடியவில்லை. பொத்தாம்பொதுவாக முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு அரசு வேலை, வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை, ஆயிரக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பு என்ற முழக்கங்கள்தான் காணப்படுகின்றன.அரசு வேலைவாய்ப்பு என்பது, பெரும்பாலான இளைஞர்களுக்கு சாத்தியமாவதற்கு வாய்ப்பு இல்லை.
திருப்பூர் போன்ற வேலைவாய்ப்பு களை அள்ளித்தரும் இடங்களில், இளைஞர்கள், இளம்பெண்கள் இங்கு பணிபுரிவதற்கான சூழலை, அரசு அக்கறை காட்டினாலும், இன்னும் சிறப்பாக்க முடியும்.விடுதி வசதிகள், தொழிலாளர்கள் குடியிருக்க மலிவு வாடகை திட்டத்தில் குடியிருப்பு, இத்தகைய விடுதி, குடியிருப்புகளுக்கு தண் ணீர் உட்பட அடிப்படை வசதிகள் செய்துகொடுத்தல் போன்றவை மேம்பட்டால், திருப்பூரை தேடி வரும் இளைஞர்கள் அதிகரிப்பர் என்பதே உண்மை.


தொழில்முனைவோர் ஆகுங்கள்!


வேலைக்காக திருப்பூர் வரும் இளைஞர்கள், தொழில்முனைவோராவதில் அக்கறை செலுத்தினால், வெற்றி சாத்தியமாகும். பின்னலாடை துறை, பல்வேறு சார்பு துறைகளை உள்ளடக்கியது. பருத்தியில் இருந்து துவங்கி, நுால், துணி, ஆடை என பல கட்டங்களாக வேலைவாய்ப்புகளை கொண்ட துறைகளின் சங்கமம். ஏதாவது ஒரு துறையில் பிரகாசிப்பவர் கூட, தொழில்முனைவோராக வென்று காட்ட முடியும்.


பயன்படுத்தாத இளைஞர்கள்!


திருப்பூரில், எதற்கெடுத்தாலும், வடமாநில தொழிலாளரை நாடும் நிலை ஏற்பட்டிருக்கிறது. பல்வேறு நிறுவனங்கள், வடமாநில தொழிலாளர் இல்லாவிட்டால், தேவையான தொழிலாளர்களுக்கு பற்றாக்குறையை சந்திக்கும் நிலையில் உள்ளன. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில், ஏராளமான இளைஞர்கள் வேலையின்றி இருக்கின்றனர். வியர்வை சிந்தி உழைத்தால், திருப்பூர் நிறுவனங்கள், ஈரம் காயும் முன்பே, ஊதியத்தை வழங்க தயாராக இருக்கின்றன. ஆனால், இதை தமிழக இளைஞர்கள் பயன்படுத்திக்கொள்வதில்லை.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழன் - தமிழ்நாடு, இந்திய ஒன்றியம்,இந்தியா
08-ஏப்-202112:31:05 IST Report Abuse
தமிழன் அதான் வெளி மாநில வேலையாளுக்கு தமிழ் நாட்டில் வேலையும் கொடுத்து, வீடும் கட்டி கொடுக்க போறாங்களாமே? பிஜேபி தேர்தல் அறிக்கையே அப்டித்தானே இருக்கு...
Rate this:
Cancel
Darmavan - Chennai,இந்தியா
05-ஏப்-202107:36:34 IST Report Abuse
Darmavan சாராயம் குடிக்கும், இலவசத்தில் வாழ்க்கை நடத்தும் சோம்பேறிகள் தமிழ் நாட்டில் வளர்த்தாயிற்று. வங்க தேச,ரோஹிங்கியா கள்ள குடியேறிகள்தான் வேலைக்கு தயாராக இருக்கின்றனர்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X