பொது செய்தி

தமிழ்நாடு

வேகம் எடுக்கும் கொரோனா

Added : ஏப் 03, 2021
Share
Advertisement
சென்னை : கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருவதால், தோட்டக்கலை பூங்காக்களை மூட, ஆலோசிக்கப்பட்டு வருகிறது. ஊட்டி தாவரவியல்பூங்கா, கொடைக்கானலில் பிரையண்ட் பூங்கா, சென்னையில் செம்மொழி பூங்கா, செங்காந்தள் பூங்கா உட்பட, மாநிலம் முழுதும், 21 பூங்காக்களை அமைத்து, தோட்டக்கலைத் துறை பராமரித்து வருகிறது. கொரோனா ஊரடங்குகாரணமாக, 2020 ஏப்., முதல் இந்த பூங்காக்கள்மூடப்பட்டன.

சென்னை : கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருவதால், தோட்டக்கலை பூங்காக்களை மூட, ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

ஊட்டி தாவரவியல்பூங்கா, கொடைக்கானலில் பிரையண்ட் பூங்கா, சென்னையில் செம்மொழி பூங்கா, செங்காந்தள் பூங்கா உட்பட, மாநிலம் முழுதும், 21 பூங்காக்களை அமைத்து, தோட்டக்கலைத் துறை பராமரித்து வருகிறது. கொரோனா ஊரடங்குகாரணமாக, 2020 ஏப்., முதல் இந்த பூங்காக்கள்மூடப்பட்டன. ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதும், அக்டோபரில் பூங்காக்கள் திறக்கப்பட்டன. தற்போது, பல்வேறு மாவட்டங்களில், கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. கோடை காலம் என்பதால், பூங்காக்களில் அதிக உள்ளூர்வாசிகள், சுற்றுலா பயணியர் கூட வாய்ப்பு உள்ளது.

எனவே, சட்டசபை தேர்தலுக்கு பின், இந்தபூங்காக்களை மூடதோட்டக்கலை துறைக்கு மாவட்ட நிர்வாகங்கள் அறிவுறுத்தி உள்ளன. இதையடுத்து, பூங்காக்களை மூடுவது குறித்து, தோட்டக்கலைத் துறை உயர் அதிகாரிகள், தீவிரமாக ஆலோசித்து வருகின்றனர். எனவே, கடந்தாண்டை போலவே இந்தாண்டும், பூங்காக்களில் கோடை விழாக்கள் நடக்க வாய்ப்பில்லை.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X