திருப்பூர்:காங்கயம் பில்டர்ஸ் பொறியியல் கல்லுாரியில், காங்கயம் தொகுதியில் தேர்தல் பணியில் ஈடுபடவுள்ள மண்டல அலுவலர், ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு நேற்று நடந்தது.தேர்தல் நடத்தும் அலுவலர் ரங்கராஜன், பொது பார்வையாளர் ரவிசங்கர் பிரசாத் ஆகியோர், பயிற்சி அளிப்பதை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். 'ஓட்டுச்சாவடி அலுவலர், ஓட்டுப்பதிவு இயந்திரம் - கட்டுப்பாட்டு கருவி இடையே இடர்பாடு ஏற்படாமல் இணைந்து தொடர்ந்திருப்பதை கவனித்து கொள்ள வேண்டும்.ஓட்டுச்சாவடிக்கு செல்லும் முன், ஓட்டுப்பதிவுக்கு தேவையான பொருட்களை சரிபார்த்து பெற்று கொள்ள வேண்டும். ஓட்டுப்பதிவு துவங்கும் முன் முகவர்களுக்கு கட்டாயம் சோதனை முறையில் விளக்கம் அளிக்க வேண்டும். ஒற்றுமையாக பணியாற்ற வேண்டும்,' என அறிவுரை வழங்கப்பட்டது.அத்துடன், 'முக கவசம் அணிந்து தான் ஓட்டுப் போட வர வேண்டும். சானிடைசர் கொண்டு கைகளை சுத்தம் செய்ய வேண்டும். சமூக இடைவெளி விட்டு வரிசையில் காத்திருக்க வேண்டும்' என, அறிவுரை வழங்க வேண்டும்.தேர்தல் நாளுக்கு முதல் நாளே ஓட்டுச்சாவடி மையம் துாய்மையாக இருப்பதை, உள்ளாட்சி அமைப்புகள் மூலம் உறுதி செய்து கொள்ள வேண்டும்' எனவும் அறிவுறுத்தப்பட்டது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE