திண்டிவனம் தொகுதியில் 166 ஓட்டு சாவடிகளில் சி.சி.டி.வி., கேமரா | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

திண்டிவனம் தொகுதியில் 166 ஓட்டு சாவடிகளில் சி.சி.டி.வி., கேமரா

Added : ஏப் 03, 2021
Share
திண்டிவனம்: திண்டிவனம் (தனி) தொகுதியில் 166 ஓட்டுச்சாவடிகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது.திண்டிவனம் (தனி) தொகுதியில் மொத்தம் 323 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் கடந்த பொதுத் தேர்தலின் போது ஏற்பட்ட பிரச்னைகளை அடிப்படையாக கொண்டு, கலவரம் நடக்கும் ஓட்டுச்சாவடிகள், பதற்றமான ஓட்டுச்சாவடிகள் கண்டறியப்பட்டுள்ளது.மேலும், மோதல் ஏற்பட வாய்ப்புள்ள

திண்டிவனம்: திண்டிவனம் (தனி) தொகுதியில் 166 ஓட்டுச்சாவடிகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது.திண்டிவனம் (தனி) தொகுதியில் மொத்தம் 323 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் கடந்த பொதுத் தேர்தலின் போது ஏற்பட்ட பிரச்னைகளை அடிப்படையாக கொண்டு, கலவரம் நடக்கும் ஓட்டுச்சாவடிகள், பதற்றமான ஓட்டுச்சாவடிகள் கண்டறியப்பட்டுள்ளது.மேலும், மோதல் ஏற்பட வாய்ப்புள்ள ஓட்டுச்சாவடிகளும் கண்டறியப்பட்டு, கண்காணிப்பு கேமரா பொருத்துவதற்கு பரிந்துரை செய்யப்ப்பட்டுள்ளது.இதன் அடிப்படையில், திண்டிவனம் தொகுதியில் உள்ள 166 ஓட்டுச்சாவடிகள் அடையாளம் காணப்பட்டு கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி நேற்று துவங்கியது. இந்தப்பணிகள் இன்று மாலைக்குள் முடிவடைந்துவிடும் என அதிகாரிகள் கூறினர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X