பொது செய்தி

தமிழ்நாடு

திண்டிவனத்தில் பணம் பட்டுவாடா வீதியில் வீசப்பட்ட ரூ.75 ஆயிரம் பறிமுதல்

Added : ஏப் 03, 2021
Share
Advertisement
திண்டிவனம்: திண்டிவனத்தில், வீட்டின் முன் கிடந்த ரூ.75 ஆயிரம் பணப்பையை பறக்கும் படையினர் பறிமுதல் செய்து, விசாரித்து வருகின்றனர்.திண்டிவனம் (தனி) தொகுதி கடவாம்பாக்கத்தில் அரசியல் கட்சியினர், வீடு, வீடாக சென்று வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து வருவதாக, பறக்கும் படையினருக்கு தகவல் வந்தது.அதன்பேரில், சக்திவேலு தலைமையிலான பறக்கும் படையினர் நேற்று காலை 8.30 மணிக்கு

திண்டிவனம்: திண்டிவனத்தில், வீட்டின் முன் கிடந்த ரூ.75 ஆயிரம் பணப்பையை பறக்கும் படையினர் பறிமுதல் செய்து, விசாரித்து வருகின்றனர்.திண்டிவனம் (தனி) தொகுதி கடவாம்பாக்கத்தில் அரசியல் கட்சியினர், வீடு, வீடாக சென்று வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து வருவதாக, பறக்கும் படையினருக்கு தகவல் வந்தது.அதன்பேரில், சக்திவேலு தலைமையிலான பறக்கும் படையினர் நேற்று காலை 8.30 மணிக்கு கடவாம்பாக்கம் காலனி, மாரியம்மன் கோவில் தெருவில் சோதனை மேற்கொண்டனர்.அப்போது, அங்குள்ள அருள்ஞானதேசன்,44; வீட்டின் முன்புறம் உள்ள பூச்செடி நடுவில் பை ஒன்று கிடந்தது. அதனை பறக்கும் படையினர் கைப்பற்றி சோதனை செய்ததில், அதில் 75,500 பணம் இருந்தது.அரசியல் கட்சியினர் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்துக் கொண்டிருந்தபோது, பறக்கும் படை வாகனத்தை கண்டதும், பணப்பையை பூச்செடி நடுவில் போட்டுவிட்டு தப்பி ஓடியது தெரிய வந்தது.அதனைத் தொடர்ந்து பறக்கும் படையினர், பணப்பையை பறிமுதல் செய்து, உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் உஷாவிடம் ஒப்படைத்தனர். மேலும், வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்தது யார் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X