புதுடில்லி : அசாமைச் சேர்ந்த, பா.ஜ., அமைச்சர் ஹிமந்தா பிஸ்வ சர்மா, பிரசாரம் செய்ய விதிக்கப்பட்டிருந்த, 48 மணி நேர தடையை, 24 மணி நேரமாக, தேர்தல் கமிஷன் குறைத்துள்ளது.
அசாமில், முதல்வர் சர்பானந்த சோனாவால் தலைமையில், பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இந்த மாநில சட்டசபைக்கு, இரண்டு கட்ட தேர்தல் முடிந்து, மூன்றாவது மற்றும் இறுதி கட்ட தேர்தல், 6ம் தேதி நடக்கிறது.மாநில அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான ஹிமந்தா பிஸ்வ சர்மா, பிரசாரத்தில் ஈடுபட்ட போது, 'போடோலாந்து மக்கள் முன்னணி கட்சி தலைவர் ஹக்ராமா மொஹிலாரியை சிறையில் அடைப்போம்' என மிரட்டியதாக, தேர்தல் கமிஷனில், காங்கிரஸ் புகார் மனு அளித்தது.
இதை விசாரித்த தேர்தல் கமிஷன், அமைச்சர் ஹிமந்தா, 48 மணி நேரம் பிரசாரம் மேற்கொள்ள தடை விதித்து, நேற்று முன்தினம் உத்தரவிட்டது.இந்நிலையில், தேர்தல் கமிஷனிடம், ஹிமந்தா மன்னிப்பு கேட்டு கடிதம் எழுதினார். இதை ஏற்ற தேர்தல் கமிஷன், அவருக்கு விதிக்கப்பட்டிருந்த, 48 மணி நேர தடையை, 24 மணி நேரமாக குறைத்து, நேற்று உத்தரவிட்டது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE