செஞ்சி: மக்கள் மீது விசுவாசம் இல்லாதவர்களுக்கு பாடம் சொல்வதற்கான நேரம் நெருங்கி விட்டது என செஞ்சி தொகுதி அ.ம.மு.க., வேட்பாளர் கவுதம் சாகர் பேசினார்.செஞ்சி தொகுதி அ.ம.மு.க., வேட்பாளர் கவுதம் சாகர் நேற்று மேல்மலையனுார் ஒன்றியம் பறையம்பட்டு, கொடம்பாடி, வடுகப்பூண்டி, கடப்பனந்தல், அவலுார் பேட்டை, கோவில்புரையூர், நொச்சலுார் கிராமங்களில் ஓட்டு கேட்டு பிரசாரம் செய்தார்.அப்போது அவர் பேசியதாவது.தமிழன் என்று சொல்லடா, தலைநிமிர்ந்து நில்லடா என்ற பெருமை தமிழ் இனத்திற்கு உண்டு. தமிழன் தலைநிமிர்ந்து நிற்பதற்கு காரணம் தமிழனின் தன்மானம். தமிழனின் இந்த அடையாளத்தை இன்று டில்லியிடம் இழந்து நிற்கின்றோம். காமராஜர், அண்ணாதுரை, எம்.ஜி.ஆர்., மற்றும் ஜெ.,விற்கு இருந்த ஆளுமையும், தன்மான உணர்வும், பழனிசாமியிடம் துளியும் இல்லை.தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக எதையும் செய்ய தயாராகி விட்டார். எப்படியாவது வெற்றி பெற வேண்டும்என்பதை தவிர எந்த தன்மான உணர்வும் இல்லை.செஞ்சி தொகுதி மக்கள் கெஞ்சி கூட கேட்டு பார்த்து விட்டனர். அ.தி.மு.க., தி.மு.க., இரண்டு கட்சியும் கல்லுாரி கொண்டுவரமாட்டோம் என பிடிவாதமாக இருந்து விட்டனர். ஆண்டவர்கள் உங்களிடம் பணம் கொடுத்து ஓட்டு வாங்கி விடலாம் என்றநப்பாசையில் பணத்தோடு வருவார்கள்.அவர்களுக்கு தக்க பாடம் சொல்ல வேண்டுமானால் அவர்களை தோற்கடிக்க வேண்டும்.தமிழக ஆட்சியாளர்களுக்கு தமிழக மக்கள் மீது விசுவாசம் இல்லை. கல்வி உரிமை, வர்த்தக உரிமை பறிபோய் விட்டது. மத்திய அரசு பெட்ரோல், டீசல், காஸ் சிலிண்டர் விலை உயர்த்திய போதும் தமிழக அரசு மத்திய அரசுக்கு தான் விசுவாசமாக இருக்கிறது. விசுவாசம் இல்லாதவர்களுக்கு மக்கள் தீர்ப்பு சொல்லும் நேரம் வந்து விட்டது. உங்களின் மதிப்பு மிக்க ஓட்டின் மூலம் ஆட்சியாளர்களுக்கு பாடம்புகட்டுங்கள்.மக்களுக்காக உழைக்க காத்திருக்கும் தினகரனை முதல்வராக்க அ.ம.மு.க.,வின் குக்கர் சின்னத்திற்கு ஓட்டு போடுங்கள் என்றார்.பிரசாரத்தின் போது, அ.ம.மு.க., ஒன்றிய செயலாளர்கள் எவான்ஸ்பால், ஜெகதீஷ்குமார், தே.மு.தி.க., முத்துசாமி, தேவக்குமார் மற்றும் கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE