பஸ் நிலையத்தில் கால்வாய் அடைப்பு கழிவுநீர் தேங்கியதால் பயணிகள் அவதி

Added : ஏப் 03, 2021
Share
Advertisement
விழுப்புரம்: விழுப்புரம் புதிய பஸ் நிலையத்தில் கால்வாயில் அடைப்புஏற்பட்டு கழிவுநீர் வெளியேறாமல் தேங்கி, துர்நாற்றம் வீசி வருவதால் பயணிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர்.விழுப்புரம் புதிய பஸ் நிலையம் தென் மாவட்ட பயணிகள் வந்து செல்லும் முக்கிய சந்திப்பாக உள்ளது. இதனால், இந்த பஸ் நிலையத்தில், எந்த நேரமும் பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்படுவது வழக்கம்.இந்த பஸ்

விழுப்புரம்: விழுப்புரம் புதிய பஸ் நிலையத்தில் கால்வாயில் அடைப்புஏற்பட்டு கழிவுநீர் வெளியேறாமல் தேங்கி, துர்நாற்றம் வீசி வருவதால் பயணிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர்.விழுப்புரம் புதிய பஸ் நிலையம் தென் மாவட்ட பயணிகள் வந்து செல்லும் முக்கிய சந்திப்பாக உள்ளது. இதனால், இந்த பஸ் நிலையத்தில், எந்த நேரமும் பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்படுவது வழக்கம்.இந்த பஸ் நிலைய கழிவு நீர் கால்வாயில், சில தினங்களுக்கு முன் பிளாஸ்டிக் மற்றும் குப்பைகள் அடைத்து கொண்டதால் கழிவுநீர் தேங்கியது.அடைப்பு அகற்றப்படாததால், கழிவு தற்போது செஞ்சி, புதுச்ேசரி பஸ்கள் நிற்கும் இடத்தில் குளம் போல் தேங்கி நிற்பதால் துர்நாற்றம் வீசுகிறது.இதனால், இவ்வழியை கடந்து செல்ல முடியாமல் பயணிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.எனவே, பயணிகளின் நலன் கருதி, கழிவு நீர் கால்வாயில் ஏற்பட்டுள்ள அடைப்பை நீக்கி, கழிவு நீர் வெளியேற்ற நகராட்சி அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X