பல்லடம்:பல்லடத்தில் நடந்த வாகன சோதனையில், நேற்று இருவரிடம் இருந்து, 1.22 லட்சம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.பல்லடம் அடுத்த அவிநாசிபாளையத்தில் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, கர்நாடக மாநிலம், பெங்களூரு பகுதியை சேர்ந்த சபாப் பாஷா, 29 வந்த காரை நிறுத்தி சோதனையிட்டனர்.அவரிடம், இருந்த 54,500 ரூபாயை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். திருப்பூர் பெரிச்சி பாளையம் சேர்ந்தவர் சுப்பிரமணியம், 56; விவசாயி. நேற்று, ஈரோடு கால்நடை சந்தை சென்றுவிட்டு, மாடுகள் விற்பனை செய்த வகையில், 67 ஆயிரத்து 900 ரூபாய் வைத்திருந்தார்.இதற்கான ஆவணங்கள் இல்லாததால், அதிகாரிகள் தொகையை பறிமுதல் செய்து தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைத்தனர். 1.22 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டு கருவூலத்தில் செலுத்தப்பட்டது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE