விவசாய சங்க தலைவர் மீது, சங் பரிவார் அமைப்பைச் சேர்ந்தவர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். ஆனாலும், வன்முறையை நாம் கையில் எடுக்கக் கூடாது. அஹிம்சை வழியில் போராட வேண்டும். மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறும் வரை, தொடர்ந்து போராட வேண்டும்.
- ராகுல், எம்.பி., காங்கிரஸ்
சீரழிக்க முயற்சி!
கடந்த ஐந்து ஆண்டுகளாக மாநிலத்தின் வளர்ச்சியைச் சிதைக்கவும், தங்களை அரசியலில் நிலைநிறுத்திக் கொள்ளவும் பேசியவர்கள், இப்போது மாநிலத்தின் வளர்ச்சி பற்றிப் பேசுகின்றனர். சிதைந்து போன மாநிலமாக கேரளாவை சித்தரித்து, அதன் கவுரவத்தை சீரழிக்க, காங்கிரசும், பா.ஜ.,வும் முயற்சிக்கின்றன.
- பினராயி விஜயன், கேரள முதல்வர், மார்க்சிஸ்ட்
வலையில் விழ வேண்டாம்!
முஸ்லிம் ஓட்டுகளை பிரிப்பதற்காக, ஐதராபாதைச் சேர்ந்த கட்சியை, பா.ஜ., விலைக்கு வாங்கி, மேற்கு வங்கத்தில் போட்டியிட வைத்துள்ளது. பா.ஜ.,வின் இந்த சதிவலையில் முஸ்லிம்கள் விழ வேண்டாம். மதவாதத்தை துாண்டி, மேற்கு வங்கத்தை துண்டாட நினைக்கும், பா.ஜ., வின் சதி திட்டத்துக்கு, ஹிந்துக்கள் துணை போகக் கூடாது.
- மம்தா பானர்ஜி, மேற்கு வங்க முதல்வர், திரிணமுல் காங்.,
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE