விழுப்புரம்: விழுப்புரம் நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என அ.ம.மு.க., வேட்பாளர் பாலசுந்தரம் கூறியுள்ளார்.விழுப்புரம் தொகுதி அ.ம.மு.க., வேட்பாளர் பாலசுந்தரம் கூறியதாவது:தமிழக மக்களை ஏமாற்றி வரும் இரு கட்சிகளை புறந்தள்ள இந்த தேர்தல் நல்ல வாய்ப்பாக அமையும். மக்கள் மாற்று சக்தியாக, ஜெ.,வின் உண்மை தொண்டர்கள் உள்ள தினகரன் தலைமையிலான அ.ம.மு.க., வேட்பாளர்களை வெற்றி பெற செய்வது உறுதி.அ.ம.மு.க., ஆட்சி அமைந்ததும் வீட்டில் ஒருவருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கி தரப்படும். முதியோர் உதவித்தொகை ரூ.2,000 உயர்த்தி வழங்கப்படும். பத்தாம் வகுப்பு வரை படித்த பெண்களுக்கு ஒரு சவரன் தங்கம், 50 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும்.அம்மா கிராமப்புற வங்கி ஏற்படுத்தப்படும். புதிய மது ஆலைகளுக்கு அனுமதியில்லை. பழைய ஆலைகள் படிப்படியாக குறைக்கப்படும். நெல், கரும்பு ஆதார விலை உயர்த்தப்படும். விழுப்புரத்தில் புதிய தொழிற்சாலை கொண்டு வந்து மாவட்டத்தில் படித்த இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கி தருவேன்.விழுப்புரம் தொகுதியில் நகரம் மற்றும் கிராமப்புறங்களில் மக்களின் அனைத்து அடிப்படை பிரச்னைகளுக்கும் தீர்வு காணப்படும்.விழுப்புரம் நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். இந்த வாக்குறுதிகள் அனைத்தும் அ.ம.மு.க., தலைமையிலான ஆட்சி அமைந்தவுடன் நிறைவேற்றப்படும்.இவ்வாறு அ.ம.மு.க., வேட்பாளர் பாலசுந்தரம் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE