பொது செய்தி

தமிழ்நாடு

தொகுதி குறைகளை தீர்த்து வைப்பேன்: அ.ம.மு.க .,வேட்பாளர் அய்யனார் உறுதி

Added : ஏப் 03, 2021
Share
Advertisement
விக்கிரவாண்டி: தொகுதியில் பொதுமக்களின் குறைகளை நிச்சயம் தீர்த்து வைப்பேன் என அ.ம.மு.க., வேட்பாளர் அய்யனார் உறுதி கூறினார்.விக்கிரவாண்டி தொகுதி அ.ம.மு.க., வேட்பாளர் அய்யனார் கூறியதாவது;தொகுதியில் தேர்தல் பிரசாரத்திற்கு செல்லும் இடங்களில் எங்களது கட்சிக்கு சிறப்பான வரவேற்பு கிடைக்கிறது. தொகுதியில் நல்லாப்பாளையம் , பழைய கருவாட்சி, புதிய கருவாட்சி பகுதியில் பகுதி நேர

விக்கிரவாண்டி: தொகுதியில் பொதுமக்களின் குறைகளை நிச்சயம் தீர்த்து வைப்பேன் என அ.ம.மு.க., வேட்பாளர் அய்யனார் உறுதி கூறினார்.விக்கிரவாண்டி தொகுதி அ.ம.மு.க., வேட்பாளர் அய்யனார் கூறியதாவது;தொகுதியில் தேர்தல் பிரசாரத்திற்கு செல்லும் இடங்களில் எங்களது கட்சிக்கு சிறப்பான வரவேற்பு கிடைக்கிறது. தொகுதியில் நல்லாப்பாளையம் , பழைய கருவாட்சி, புதிய கருவாட்சி பகுதியில் பகுதி நேர ரேஷன் கடை கொண்டு வருவேன். ஆவுடையார்பட்டில் இருளர்கள் சுடுகாட்டிற்கு செல்லும் பாதை அமைத்து தருவேன். தொரவி ஊராட்சியோடு இணைந்துள்ள டி. பனப்பாக்கம் கிராமத்தை தனி ஊராட்சியாக மாற்றுவேன். முதியோர் ஓய்வூதிய தொகை தடங்கலின்றி கிடைத்திடவும், முண்டியம்பாக்கம் ஒரத்தூர் பாதையில் ரயில்வே மேம்பாலம் அமைத்திட நடவடிக்கை எடுப்பேன். தொகுதியிலுள்ள ஏரிகளில் தூர்வாரி சீரமைத்து தருவேன்.ஏழை எளிய மாணவர்களின் மேல் படிப்பிற்கு கல்வி உதவித்தொகை என் சொந்த நிதியிலிருந்து வழங்குவேன். துணை சுகாதார நிலையங்களில் மேம்படுத்தப்பட்ட மருத்துவ வசதிகளை செய்து கொடுத்தும், சாலை வசதி இல்லாத இடங்களில் சிமெண்ட் சாலை அமைத்தும் , குடிநீர் பற்றாக்குறை உள்ள இடங்களில் குடிநீர் பிரச்னையை போக்கிட நடவடிக்கை எடுப்பேன்.தொகுதி மக்களின் குறைகளை நிச்சயம் தீர்த்து வைப்பேன். மேற்கண்ட பணிகளை மக்களுக்கு சேவை செய்ய பிரஷர் குக்கர் சின்னத்தில் ஓட்டளித்து வெற்றிபெற செய்ய வேண்டுகிறேன்.இவ்வாறு அ.ம.மு.க., வேட்பாளர் அய்யனார் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X