பொது செய்தி

தமிழ்நாடு

புதுச்சேரி-திண்டிவனம் புறவழிச்சாலையில் நாவற்குளம் சந்திப்பில் விபத்தை தடுக்க பேரிகார்டு

Added : ஏப் 03, 2021
Share
Advertisement
வானூர்: புதுச்சேரி-திண்டிவனம் புறவழிச்சாலையில் நாவற்குளம் செல்லும் சாலை சந்திப்பில் விபத்துக்களை தடுக்க பேரிகார்டு வைக்கப்பட்டுள்ளது.புதுச்சேரி-திண்டிவனம் புறவழிச்சாலை மிக முக்கியத்துவம் வாய்ந்த சாலையாக உள்ளது. இவ்வழியாக தினசரி ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகிறது. குறிப்பாக சென்னை, காஞ்சிபுரம், செஞ்சி, திருவண்ணாமலை மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா போன்ற

வானூர்: புதுச்சேரி-திண்டிவனம் புறவழிச்சாலையில் நாவற்குளம் செல்லும் சாலை சந்திப்பில் விபத்துக்களை தடுக்க பேரிகார்டு வைக்கப்பட்டுள்ளது.புதுச்சேரி-திண்டிவனம் புறவழிச்சாலை மிக முக்கியத்துவம் வாய்ந்த சாலையாக உள்ளது. இவ்வழியாக தினசரி ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகிறது. குறிப்பாக சென்னை, காஞ்சிபுரம், செஞ்சி, திருவண்ணாமலை மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலத்தை சேர்ந்த வாகனங்கள் அதிகளவில் வந்து செல்கிறது.மேலும், வானுார் மற்றும் அதைச்சுற்றியுள்ள மக்கள் புதுச்சேரியில் உள்ள லாஸ்பேட்டை, கருவடிக்குப்பம், கிழக்கு கடற்கரை சாலை செல்லும் வாகன ஓட்டிகள் கோரிமேடு வழியாக செல்லாமல், அதற்கு முன்னதாக இருக்கும் நாவற்குளம் சாலை வழியாக சென்று வருகின்றனர். புதுச்சேரியில் உள்ள வாகன ஓட்டிகளும், நாவற்குளம் வழியை அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர்.இந்த சாலை சந்திப்பில் தொடர்ந்து விபத்துக்கள் ஏற்பட்டு வந்தது. விபத்துக்களை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து கோட்டக்குப்பம் டி.எஸ்.பி., அஜய்தங்கம் உத்தரவின் பேரில், ஆரோவில் போலீசார் நாவற்குளம் சந்திப்பில், விபத்துக்களை தடுக்கும் வகையில் இருபுறமும் பேரி கார்டு வைத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X