சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஆரம்ப சுகாதார நிலையத்தில் நோயாளி பலி: உறவினர்கள் முற்றுகை

Added : ஏப் 03, 2021
Share
Advertisement
திருவெண்ணெய்நல்லுார்: அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்ட நோயாளி இறந்ததால், உறவினர்கள் ஆவேசமடைந்தனர்.திருவெண்ணெய்நல்லுார் அடுத்த இருவேல்பட்டு காலனியை சேர்ந்தவர் அமிர்தலிங்கம் மனைவி செல்வி, 41; இவருக்கு கடந்த 31ம் தேதி உடல்நிலை சரியில்லாததால் இருவேல்பட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்று வீட்டிற்கு சென்றார். சற்று நேரத்தில் உடல்நிலை

திருவெண்ணெய்நல்லுார்: அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்ட நோயாளி இறந்ததால், உறவினர்கள் ஆவேசமடைந்தனர்.திருவெண்ணெய்நல்லுார் அடுத்த இருவேல்பட்டு காலனியை சேர்ந்தவர் அமிர்தலிங்கம் மனைவி செல்வி, 41; இவருக்கு கடந்த 31ம் தேதி உடல்நிலை சரியில்லாததால் இருவேல்பட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்று வீட்டிற்கு சென்றார். சற்று நேரத்தில் உடல்நிலை மோசமடைந்தது. உடன் அவரை மீண்டும் அதே ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். சற்று நேரத்தில் அங்கு அவர் இறந்தார்.ஆத்திரமடைந்த உறவினர்கள், உரிய சிகிச்சை அளிக்காததால், செல்வி இறந்ததாக கூறி ஆரம்ப சுகாதார நிலையத்தை முற்றுகையிட்டனர்.போலீசார் விரைந்து சென்று, பேச்சுவார்த்தை நடத்தி, செல்வி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் இது குறித்து வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X