லஞ்சமாக பாலியல் உறவு? போலீஸ் அதிகாரி 'டிஸ்மிஸ்'

Added : ஏப் 03, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
ஜெய்ப்பூர் : ராஜஸ்தானில், பெண்ணின் புகார் குறித்து விசாரிக்க, பாலியல் உறவை லஞ்சமாக கேட்ட போலீஸ் அதிகாரி, பணியில் இருந்து, 'டிஸ்மிஸ்' செய்யப்பட்டார். ராஜஸ்தானில், முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான, காங்கிரஸ் ஆட்சி அமைந்துள்ளது.இங்குள்ள ஜெய்ப்பூரில், பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகளை விசாரிக்கும், போலீஸ் சிறப்பு பிரிவின் உதவி கமிஷனராக இருந்தவர் கைலாஷ் போஹ்ரா,

ஜெய்ப்பூர் : ராஜஸ்தானில், பெண்ணின் புகார் குறித்து விசாரிக்க, பாலியல் உறவை லஞ்சமாக கேட்ட போலீஸ் அதிகாரி, பணியில் இருந்து, 'டிஸ்மிஸ்' செய்யப்பட்டார்.

ராஜஸ்தானில், முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான, காங்கிரஸ் ஆட்சி அமைந்துள்ளது.இங்குள்ள ஜெய்ப்பூரில், பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகளை விசாரிக்கும், போலீஸ் சிறப்பு பிரிவின் உதவி கமிஷனராக இருந்தவர் கைலாஷ் போஹ்ரா, 52.ஒரு பெண் கொடுத்த, பாலியல் வன்முறை உள்ளிட்ட மூன்று புகார்கள் தொடர்பாக விசாரணை நடத்த, இவர் லஞ்சம் கேட்டுள்ளார்.'என்னிடம் பணம் இல்லை' என, அந்த பெண் கூறியதால், பாலியல் உறவுக்கு அழைத்துள்ளார். இது குறித்து அந்த பெண் கொடுத்த புகாரின் அடிப்படையில், லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப் பதிவு செய்து, உதவி கமிஷனர் கைலாஷ் போஹ்ராவை, கடந்த மாதம் கைது செய்தனர்.

இதையடுத்து, பணியில் இருந்து அவர், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார். 'இந்த நடவடிக்கை போதுமானது அல்ல' என, சட்டசபையில், பா.ஜ., உறுப்பினர்கள் குரல் எழுப்பினர். இந்நிலையில், கவர்னர் ஒப்புதலுடன், உதவி கமிஷனர் கைலாஷ் போஹ்ராவை, பணியில் இருந்து, 'டிஸ்மிஸ்' செய்து, மாநில அரசு, தற்போது உத்தரவிட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
.Dr.A.Joseph - London,யுனைடெட் கிங்டம்
04-ஏப்-202122:48:10 IST Report Abuse
.Dr.A.Joseph இதை சட்டமாக்கி உயிர் போகும் காலம் வரையிலும் ஆயுள் தண்டனை வழங்க வேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X