விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஏழு சட்டசபை தொகுதியிலும், வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து ஓட்டுக்களை பெறும் முயற்சியில் அரசியல் கட்சியினர் ஈடுபட்டுள்ளனர்.தமிழகத்தில் 16வது சட்டசபை தேர்தல் நாளை மறுநாகள் நடக்கிறது. இத்தேர்தலில், விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஏழு சட்டசபை தொகுதிகளில் 102 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இந்நிலையில், தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் கொடுப்பதை தடுக்கும் வகையில், தேர்தல் பறக்கும் படை அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.மாவட்டத்தில் ஒரு தொகுதிக்கு 3 குழுக்கள் வீதம் ஏழு தொகுதிகளுக்கும் 21 பறக்கும் படை குழுக்கள் மற்றும் 7 நிலையான கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.இக்குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டு உரிய ஆவணமின்றி எடுத்துச்செல்லும் பணம் மற்றும் பொருட்களை பறிமுதல் செய்து வருகின்றனர்.இந்நிலையில், தேர்தலுக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ளது. இதனால், களத்தில் உள்ள பிரதான கட்சி வேட்பாளர்கள் வாக்காளர்களிடம் ஓட்டுக்களை பெறுவதில் தீவிரம் காட்டி வருகின்றனர்.தேர்தல் பறக்கும் படையினரின் கண்காணிப்பையும் மீறி, தற்போது சில தொகுதிகளில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்யும் பணி ரகசியமாக அரங்கேறி வருகின்றது. மேலும், மாவட்டத்தில் வி.ஐ.பி., தொகுதிகளான விழுப்புரம் மற்றும் திருக்கோவிலுார் பகுதி வாக்காளர்கள் குஷியாக உள்ளனர்
-நமது சிறப்பு நிருபர்-.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE