சம்பவம் செய்தி

தமிழ்நாடு

முறையான பணம் கூட பறிமுதல்? செஞ்சி தாலுகா வியாபாரிகள் புகார்

Added : ஏப் 03, 2021
Share
Advertisement
விழுப்புரம்,: செஞ்சி பகுதியில், வியாபாரிகள் முறையாக கொண்டு செல்லும் ரொக்கப் பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்வதாக கலெக்டருக்கு புகார் மனு அனுப்பப்பட்டுள்ளது.செஞ்சி தாலுகா வர்த்தகர் சங்க தலைவர் செல்வராஜ், செயலாளர் வெங்கட் மற்றும் நிர்வாகிகள், கலெக்டருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:செஞ்சி தாலுகாவில், வியாபாரம் செய்யும் வணிகர்கள் தினசரி கொள்முதல்

விழுப்புரம்,: செஞ்சி பகுதியில், வியாபாரிகள் முறையாக கொண்டு செல்லும் ரொக்கப் பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்வதாக கலெக்டருக்கு புகார் மனு அனுப்பப்பட்டுள்ளது.செஞ்சி தாலுகா வர்த்தகர் சங்க தலைவர் செல்வராஜ், செயலாளர் வெங்கட் மற்றும் நிர்வாகிகள், கலெக்டருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:செஞ்சி தாலுகாவில், வியாபாரம் செய்யும் வணிகர்கள் தினசரி கொள்முதல் மற்றும் வரவு தொகையினை எடுத்துக் கொண்டு தக்க ஆவணங்களுடன் வருகின்றனர். அப்போது, தேர்தல் பறக்கும் படையினர், வியாபாரிகள் வைத்திருக்கும் பணத்தை பறிமுதல் செய்துகொண்டு, உரிய விளக்கத்தை கேட்டறியாமல், வழக்குப் பதிந்துவிடுகின்றனர்.இதனால், வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தியும், மன உளைச்சலும் ஏற்படுகிறது. எனவே, உரிய ஆவணங்களுடன் கொண்டு செல்லும் பணத்தை, வியாபாரிகளிடம் இருந்து பறிமுதல் செய்வதை தடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X