அரசியல் செய்தி

தமிழ்நாடு

மின் தடை ஏற்படுத்தி 'பட்டுவாடா' தேர்தல் கமிஷனில் காங்., புகார்

Added : ஏப் 03, 2021
Share
Advertisement
சென்னை : 'ஆளும் கட்சியினர் பணப் பட்டுவாடா செய்ய வசதியாக, இரவில் மின் இணைப்பை துண்டிக்கும் மின் ஊழியர்கள் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, தமிழக காங்கிரசை சேர்ந்த வழக்கறிஞர் கனகராஜ், தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம், புகார் மனு அளித்துள்ளார். மனுவில், அவர் கூறியிருப்பதாவது:தேர்தல் நேர்மையாக, வெளிப்படையாக நடக்க, தேர்தல் கமிஷன் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து

சென்னை : 'ஆளும் கட்சியினர் பணப் பட்டுவாடா செய்ய வசதியாக, இரவில் மின் இணைப்பை துண்டிக்கும் மின் ஊழியர்கள் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, தமிழக காங்கிரசை சேர்ந்த வழக்கறிஞர் கனகராஜ், தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம், புகார் மனு அளித்துள்ளார்.

மனுவில், அவர் கூறியிருப்பதாவது:தேர்தல் நேர்மையாக, வெளிப்படையாக நடக்க, தேர்தல் கமிஷன் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கடந்த சில தினங்களாக தமிழகம் முழுதும் குறிப்பிட்ட பகுதிகளில், முறைகேடான செயலுக்காக மின்தடை ஏற்படுத்தப்படுகிறது. வேட்பாளர்கள் மின் தடையை ஏற்படுத்தி, வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கின்றனர். இதைத் தடுக்க, தடையின்றி மின்சாரம் வழங்க உத்தரவிட வேண்டும்.மின் தடை ஏற்படுத்தி, ஆளும்கட்சியினரின் பணப் பட்டுவாடாவுக்கு துணைபோகும் மின் வாரிய ஊழியர்கள் மீது, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X