பொது செய்தி

தமிழ்நாடு

நிர்வாகிகளை அரவணைக்காத வேட்பாளரால் ரிஷிவந்தியத்தில் சிதறும் அ.தி.மு.க., ஓட்டு

Added : ஏப் 03, 2021
Share
Advertisement
-ரிஷிவந்தியம் தொகுதியில் கட்சி நிர்வாகிகளை அரவணைக்காத வேட்பாளரின் நடவடிக்கையால் அ.தி.மு.க., வின் ஓட்டுகள் எதிரணிக்கு சிதறும் நிலை ஏற்பட்டுள்ளது.ரிஷிவந்தியம் தொகுதியில் தி.மு.க., மற்றும் அ.தி.மு.க., நேரடியாக களம் காண்கிறது.தி.மு.க., வேட்பாளராக சிட்டிங் எம்.எல்.ஏ., வசந்தம் கார்த்திகேயனும், அ.தி.மு.க., வேட்பாளராக திருக்கோவிலூர் மேற்கு ஒன்றிய செயலாளர் சந்தோஷ் களத்தில்

-ரிஷிவந்தியம் தொகுதியில் கட்சி நிர்வாகிகளை அரவணைக்காத வேட்பாளரின் நடவடிக்கையால் அ.தி.மு.க., வின் ஓட்டுகள் எதிரணிக்கு சிதறும் நிலை ஏற்பட்டுள்ளது.ரிஷிவந்தியம் தொகுதியில் தி.மு.க., மற்றும் அ.தி.மு.க., நேரடியாக களம் காண்கிறது.தி.மு.க., வேட்பாளராக சிட்டிங் எம்.எல்.ஏ., வசந்தம் கார்த்திகேயனும், அ.தி.மு.க., வேட்பாளராக திருக்கோவிலூர் மேற்கு ஒன்றிய செயலாளர் சந்தோஷ் களத்தில் உள்ளனர்.இவர்கள் இருவருக்கும் இடையே முன்னாள் எம்.எல்.ஏ., சிவராஜ் மகன் பிரபு அ.ம.மு.க., வேட்பாளராக தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.வேட்பாளராக அறிவிப்பதற்கு முன்பிருந்தே வசந்தம் கார்த்திகேயன் கட்சி நிர்வாகிகளை ஒருங்கிணைத்து தாராளமாக செலவு செய்து வருகிறார்.இதற்கு எதிர்மாறாக அ.தி.மு.க., வேட்பாளர் சந்தோஷ் செலவு செய்வதில் சிக்கனத்தைக் கடைபிடித்து வருகிறார்.நாளை மறுநாள் தேர்தல் நடக்க உள்ள நிலையில் இதுவரை கட்சி சின்னம் வரைந்ததற்கு கூட சம்பந்தப்பட்ட நிர்வாகிகளுக்கு பணம் செட்டில் ஆக வில்லை.துவக்கத்திலிருந்தே சின்னம் வரைந்தது, கொடி கட்டியது, பிரசாரத்திற்கு அதிக ஆட்களை கூட்டியது என கையிலிருந்து கணிசமான தொகையை செலவழித்த முக்கிய நிர்வாகிகளும் சோர்ந்து போய்விட்டனர்.இந்நிலையில் தேர்தல் களப்பணி சரிவர செய்யவில்லை என தொகுதியில் உள்ள அ.தி.மு.க., ஒன்றிய செயலாளர்கள் இருவர் மீதும் அமைச்சர் சண்முகத்திடம் வேட்பாளர் சந்தோஷ் புகார் தெரிவித்ததாக கூறப்படுகிறது.அவர்களை அமைச்சர் சண்முகம் கண்டித்துள்ளார்.தொகுதியை சேர்ந்தவருக்கு சீட் தரவில்லை, ஆளும் கட்சியாக இருந்தும் கட்சி தலைமை கொடுத்த பணத்தைகூட தாராளமாக செலவு செய்யவில்லை, இதற்கிடையே அமைச்சரின் 'டோஸ்' ஆகிய காரணங்களால் ஒன்றிய செயலாளர்கள் இருவரும் மனம் நொந்து போய் உள்ளனர்.பணம் செலவு செய்வதில் துவக்கத்திலிருந்தே சிக்கனம் கடைபிடித்ததால் கூட்டணி கட்சி நிர்வாகிகளும் வெளியில் சொல்ல முடியாமல் குமுறுகின்றனர்.தேர்தல் தருணத்தில் கட்சி நிர்வாகிகளை அரவணைத்து பிரசாரத்தின் போது செய்யவேண்டிய நியாயமான செலவுகளை வேட்பாளர் செய்யத் தவறியதால் ரிஷிவந்தியம் தொகுதியில் அ.தி.மு.க., வின் ஓட்டுக்கள் சிதறி எதிரணிக்கு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

-நமது சிறப்பு நிருபர்

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X