பொது செய்தி

தமிழ்நாடு

உண்மை தொண்டர்களுக்கு மதிப்பில்லை பா.ஜ.,வில் இணைந்த தி.மு.க.,வினர் ஆதங்கம்

Added : ஏப் 03, 2021
Share
Advertisement
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் தி.மு.க.,விலிருந்து விலகி பா.ஜ., வில் இணைந்த முக்கிய நிர்வாகிகளுக்கு பாராட்டு கூட்டம் நேற்று நடந்தது. கள்ளக்குறிச்சியில் தி.மு.க., தலைமை செயற்குழு உறுப்பினர் செல்வநாயகம், சங்கராபுரம் வடக்கு ஒன்றிய தி.மு.க., செயலாளர் முனியன், தே.மு.தி.க., கள்ளக்குறிச்சி நகர செயலாளர் சரண்ராஜ் ஆகியோர் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா முன்னிலையில், கடந்த 1-ம்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் தி.மு.க.,விலிருந்து விலகி பா.ஜ., வில் இணைந்த முக்கிய நிர்வாகிகளுக்கு பாராட்டு கூட்டம் நேற்று நடந்தது. கள்ளக்குறிச்சியில் தி.மு.க., தலைமை செயற்குழு உறுப்பினர் செல்வநாயகம், சங்கராபுரம் வடக்கு ஒன்றிய தி.மு.க., செயலாளர் முனியன், தே.மு.தி.க., கள்ளக்குறிச்சி நகர செயலாளர் சரண்ராஜ் ஆகியோர் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா முன்னிலையில், கடந்த 1-ம் தேதி பா.ஜ.,வில் இணைந்தனர்.தொடர்ந்து மாற்றுக்கட்சியில் இருந்து பா.ஜ.,வில் இணைந்தவர்களுக்கு பாராட்டுக்கூட்டம் கள்ளக்குறிச்சியில் நேற்று நடந்தது. மாவட்ட தலைவர் பாலசுந்தரம் தலைமை தாங்கினார். சங்கராபுரம் தொகுதி பா.ம.க., வேட்பாளர் டாக்டர் ராஜா முன்னிலை வகித்தார்.கூட்டத்தில் பா.ஜ., வில் இணைந்த செல்வநாயகம் மற்றும் முனியன் ஆகியோர் ஒருங்கிணைந்து கூறியதாவது : சங்கராபுரம் தொகுதியில் பா.ம.க., சார்பில் போட்டியிடும் டாக்டர் ராஜா, தெளிவான சிந்தனை கொண்டவர். இவருக்கு வாக்களித்தால் பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் கொண்டுவரப்பட்டு தொகுதி வளர்ச்சி அடையும். தி.மு.க.,வில் உண்மையான தொண்டனுக்கு மதிப்பில்லை. மாவட்ட அளவில் குறுநில மன்னர்கள்போல் ஆட்சி செய்து கொண்டிருக்கிறார்கள் எனக்கூறினர்.மாவட்ட பா.ஜ., நிர்வாகிகள் ரவிச்சந்திரன், துரை, செல்வகணபதி, இந்தியன் துரைவேல், அலெக்சாண்டர், சிவா, மகேந்திரன், ஒன்றிய தலைவர் ஜெய்கணேஷ் உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.சரண்ராஜ் நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X