தொட்டியத்தில் கால்நடை மருத்துவமனை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தொட்டியத்தில் கால்நடை மருத்துவமனை

Added : ஏப் 03, 2021
Share
சின்னசேலம்,: தொட்டியம் அண்ணாநகர் பகுதியில் புதிய கால்நடை மருத்துவமனை அமைக்கப்படும் என பா.ம.க., வேட்பாளர் டாக்டர் ராஜா வாக்குறுதி அளித்தார்.சங்கராபுரம் தொகுதியில் அ.தி.மு.க., கூட்டணியில் பா.ம,க., சார்பில் போட்டியிடும் டாக்டர் ராஜா, தொகுதிக்குட்பட்ட தொட்டியம் அண்ணாநகர், நாககுப்பம், வடக்கனந்தல் பேரூராட்சி உட்பட பல்வேறு கிராமங்களில் நேற்று பிரசாரம் மேற்கொண்டார்.அப்போது

சின்னசேலம்,: தொட்டியம் அண்ணாநகர் பகுதியில் புதிய கால்நடை மருத்துவமனை அமைக்கப்படும் என பா.ம.க., வேட்பாளர் டாக்டர் ராஜா வாக்குறுதி அளித்தார்.சங்கராபுரம் தொகுதியில் அ.தி.மு.க., கூட்டணியில் பா.ம,க., சார்பில் போட்டியிடும் டாக்டர் ராஜா, தொகுதிக்குட்பட்ட தொட்டியம் அண்ணாநகர், நாககுப்பம், வடக்கனந்தல் பேரூராட்சி உட்பட பல்வேறு கிராமங்களில் நேற்று பிரசாரம் மேற்கொண்டார்.அப்போது அங்குள்ள மக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். அப்போது தொட்டியம் அண்ணாநகர் பகுதியில் புதிய கால்நடை மருத்துவமனை அமைக்கப்படும், அங்கு நிலவும் தண்ணீர் பற்றாக்குறையை சரிசெய்து, அனைத்து பகுதிகளிலும் தார்சாலை அமைத்து தரப்படும் என வாக்குறுதி அளித்து மாம்பழம் சின்னத்திற்கு ஓட்டு கேட்டார்.தொடர்ந்து வடக்கனந்தலில் பெண்கள் பலர் ராஜாவுக்கு ஆதரவு தெரிவித்தனர். அப்போது அ.தி.மு.க., ஒன்றிய செயலாளர் அய்யம்பெருமாள், பா.ம.க., மாநில துணை பொதுச் செயலாளர் ரமேஷ், இளைஞரணி துணை செயலாளர் தமிழரசன், மாணவரணி துணை செயலாளர் மணி, ஊர் முக்கியஸ்தர் சுரேஷ் உட்பட கூட்டணி கட்சியினர் பலர் பங்கேற்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X