சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வேறு சின்னம் தெரிவதாக பொய் கூறினால் சிறை

Added : ஏப் 03, 2021
Share
Advertisement
சென்னை : 'ஓட்டளித்த சின்னத்திற்கு பதிலாக, வேறு சின்னம் தெரிகிறது' என, தவறாக புகார் செய்தால், ஆறு மாதம் சிறை தண்டனை விதிக்கப்படும். தமிழகத்தில், அனைத்து ஓட்டுச் சாவடிகளிலும், வாக்காளர் எந்த சின்னத்திற்கு ஓட்டளித்தாரோ, அந்த சின்னம் அச்சாவதை, பார்வையிடும் வசதி கொண்ட, வி.வி.பி.ஏ.டி., இயந்திரம் பயன்படுத்தப்பட உள்ளது.வாக்காளர் ஓட்டளித்த பின், யாருக்கு ஓட்டளித்தாரோ,

சென்னை : 'ஓட்டளித்த சின்னத்திற்கு பதிலாக, வேறு சின்னம் தெரிகிறது' என, தவறாக புகார் செய்தால், ஆறு மாதம் சிறை தண்டனை விதிக்கப்படும்.

தமிழகத்தில், அனைத்து ஓட்டுச் சாவடிகளிலும், வாக்காளர் எந்த சின்னத்திற்கு ஓட்டளித்தாரோ, அந்த சின்னம் அச்சாவதை, பார்வையிடும் வசதி கொண்ட, வி.வி.பி.ஏ.டி., இயந்திரம் பயன்படுத்தப்பட உள்ளது.வாக்காளர் ஓட்டளித்த பின், யாருக்கு ஓட்டளித்தாரோ, அவரது பெயர் மற்றும் சின்னம், வி.வி.பி.ஏ.டி., இயந்திரத்தில் தெரியாமல், வேறு ஒரு சின்னமும், பெயரும் தெரிவதாக கூறினால், அந்த நபரிடம், ஓட்டுச்சாவடி தலைமை அலுவலர், உரிய படிவத்தில் புகார் பெற வேண்டும்.பின், ஓட்டுச்சாவடி முகவர்களுடன், ஓட்டளிக்கும் பகுதிக்கு சென்று, அந்த நபரை மீண்டும் முகவர்களுக்கு முன்பாக, ஒரு ஓட்டு பதிவு செய்ய, அனுமதிக்க வேண்டும்.

அந்த நபர், யாருக்கு ஓட்டளித்தார் என்பதை, '17ஏ' பதிவேட்டிலும், '17சி' படிவத்திலும், பதிவு செய்ய வேண்டும். அவர் ஓட்டளித்தது, சரியாக வந்தால், வாக்காளர் வேண்டுமென்றே, தவறான புகாரை கொடுத்ததாக கருதப்படும். அவர் தண்டனைக்குரியவர் ஆவார். அவரை உடனடியாக, காவல் துறை வசம் ஒப்படைக்க வேண்டும். அவர், ஆறு மாதங்கள் சிறை தண்டனை அல்லது, 1,000 ரூபாய் அபராதம் அல்லது இரண்டும் சேர்ந்து அனுபவிக்க நேரிடும்.

ஒருவேளை இயந்திரத்தில், வாக்காளர் ஓட்டு போட்ட சின்னம் மற்றும் வேட்பாளர் விபரம் ஒளிராமல், வேறு சின்னம், வேட்பாளர் விபரம் தெரிந்தால், ஓட்டுப்பதிவை நிறுத்த வேண்டும். உடனடியாக தேர்தல் நடத்தும் அலுவலருக்கு, தகவல் தெரிவிக்க வேண்டும் என, ஓட்டுச்சாவடி தலைமை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X