பொது செய்தி

தமிழ்நாடு

கள்ளக்குறிச்சி தொகுதியின் வளர்ச்சிக்கு புதிய திட்டங்கள்: மணி ரத்தினம்

Added : ஏப் 03, 2021
Share
Advertisement
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி தொகுதியில் காங்., வேட்பாளர் மணிரத்தினம், முக்கிய நிர்வாகிகள், தேவலாய பங்குதந்தைகள் மற்றும் பொதுமக்களை சந்தித்து ஓட்டு சேகரித்தார்.அப்போது அவர் கூறியதாவது;கள்ளக்குறிச்சி நகரம் மற்றும் கிராமங்களில் நிலவும் குடிநீர் பிரச்சனையால் பொதுமக்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். மக்களின் முக்கிய கோரிக்கையான குடிநீர் பிரச்னை

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி தொகுதியில் காங்., வேட்பாளர் மணிரத்தினம், முக்கிய நிர்வாகிகள், தேவலாய பங்குதந்தைகள் மற்றும் பொதுமக்களை சந்தித்து ஓட்டு சேகரித்தார்.அப்போது அவர் கூறியதாவது;கள்ளக்குறிச்சி நகரம் மற்றும் கிராமங்களில் நிலவும் குடிநீர் பிரச்சனையால் பொதுமக்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். மக்களின் முக்கிய கோரிக்கையான குடிநீர் பிரச்னை தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.அதேபோல், முறையான வடிகால் வசதியின்மையால், மழை காலங்களில் சாலைகளில் கழிவு நீர் வழிந்தோடி குடியிருப்பு பகுதிகளில் தேங்குகிறது. இதனால், பொதுமக்கள் பெரிதும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். நகரின் அனைத்து பகுதிகளிலும் கழிவு நீர் வடிகால் வசதி அமைத்து முறைப்படுத்தப்படும். நகரம் மட்டுமின்றி கிராமங்கள் தோறும் மக்களுக்கான அனைத்து அடிப்படை வசதிகளும் நிறைவேற்றி தரப்படும்.கள்ளக்குறிச்சி தொகுதியில் அனைத்து தரப்பு மக்கள் பயன்பெரும் வகையில் பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் கொண்டு வரப்படும்.தொடர்ந்து தியாகதுருகத்தில் உள்ள தேவலாயங்களின் பங்குதந்தைகளை சந்தித்து ஆதரவு திரட்டினார்.நிகழ்ச்சயில், தி.மு.க., தொழிலதிபர் மணிமாறன், காங்., மாவட்ட தலைவர் ஜெய்கணேஷ், தி.மு.க., பொறுப்புக்குழு உறுப்பினர்கள் கென்னடி, சண்முகம், முருகன், ஒன்றிய செயலாளர் வெங்கடாசலம், முன்னாள் ஒன்றிய செயலாளர் சதா மகாலிங்கம், நகர துணை செயலாளர் கோபால், காங்., நிர்வாகிகள் மணிமொழி, வீரமுத்து உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X