பொது செய்தி

தமிழ்நாடு

தொழிலாளருக்கு தேர்தல் விடுமுறை: இன்று முழுவீச்சில் ஆடை உற்பத்தி

Added : ஏப் 03, 2021
Share
Advertisement
திருப்பூர்:பனியன் தொழிலாளருக்கு, தேர்தல் நாளான 6ம் தேதி, விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது; ஆர்டர் அதிகமுள்ள நிறுவனங்கள், வாரவிடுமுறை நாளான இன்றும் முழுவீச்சில் இயங்குகின்றன.திருப்பூர் ஆடை உற்பத்தி நிறுவனங்கள், ஜாப்ஒர்க் நிறுவனங்களில், திண்டுக்கல், மதுரை, திருநெல்வேலி, துாத்துக்குடி, கன்னியாகுமரி போன்ற வெளிமாவட்ட தொழிலாளர் அதிக அளவில் பணிபுரிகின்றனர். இவர்கள்,

திருப்பூர்:பனியன் தொழிலாளருக்கு, தேர்தல் நாளான 6ம் தேதி, விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது; ஆர்டர் அதிகமுள்ள நிறுவனங்கள், வாரவிடுமுறை நாளான இன்றும் முழுவீச்சில் இயங்குகின்றன.
திருப்பூர் ஆடை உற்பத்தி நிறுவனங்கள், ஜாப்ஒர்க் நிறுவனங்களில், திண்டுக்கல், மதுரை, திருநெல்வேலி, துாத்துக்குடி, கன்னியாகுமரி போன்ற வெளிமாவட்ட தொழிலாளர் அதிக அளவில் பணிபுரிகின்றனர். இவர்கள், திருப்பூரில், தனியாகவும், குடும்பத்தினருடன் தங்கியுள்ளனர்.பல ஆண்டுகளாக பணிபுரியும் தொழிலாளர் பெரும்பாலானோர், திருப்பூரில் ஓட்டளிக்கும் வகையில், வாக்காளர் அடடையாள அட்டை மாற்றியுள்ளனர்; புதிய தொழிலாளர்கள், சொந்த ஊர் சென்று, ஓட்டளிக்க வேண்டியுள்ளது.வரும் 6ம் தேதி, நுாறு சதவீத ஓட்டுப்பதிவை உறுதி செய்வதற்காக, சம்பளத்துடன் தொழிலாளருக்கு விடுமுறை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
தொழிலாளர் ஓட்டுப்பதிவு செய்ய ஏதுவாக, பின்னலாடை உற்பத்தி நிறுவனங்கள், வரும் 6ம் தேதி, விடுமுறை அறிவித்துள்ளன. வழக்கமாக வாரம்தோறும் ஞாயிற்றுக்கிழமை, பனியன் தொழிலாளருக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. 6ம் தேதி, தேர்தல் விடுமுறை என்பதால், ஆர்டர் அதிகமுள்ள நிறுவனங்கள், ஞாயிறன்றும் (இன்று), உற்பத்தியை துவக்குகின்றன.இந்நிறுவனங்கள், நேற்று வழங்கவேண்டிய வாரச்சம்பளத்தை, இன்று பட்டுவாடா செய்கின்றன. வாக்காளர் அட்டையில் முகவரி மாற்றம் செய்யாத, புதிய தொழிலாளர்கள், ஓட்டளிக்க, இன்று முதல் சொந்த ஊர் செல்ல உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X