நீர் நிலைகளை மேம்படுத்துவேன் தி.மு.க., வேட்பாளர் பொன்முடி உறுதி | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

நீர் நிலைகளை மேம்படுத்துவேன் தி.மு.க., வேட்பாளர் பொன்முடி உறுதி

Added : ஏப் 03, 2021
Share
திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் தொகுதியில் உள்ள நீர்நிலைகளை மேம்படுத்துவேன் என தி.மு.க., வேட்பாளர் புகழேந்தி கூறினார்.திருக்கோவிலுார் தொகுதி தி.மு.க., வேட்பாளர் பொன்முடி, அரகண்டநல்லுார் பள்ளிவாசலில் தொழுகை முடித்துவிட்டு வந்த முஸ்லிம்கள் மற்றும் கொல்லுார், புத்துார், மணம்பூண்டி கிராமங்களில் உதயசூரியன் சின்னத்திற்கு ஓட்டு கேட்டு பிரசாரம் செய்தபோது

திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் தொகுதியில் உள்ள நீர்நிலைகளை மேம்படுத்துவேன் என தி.மு.க., வேட்பாளர் புகழேந்தி கூறினார்.திருக்கோவிலுார் தொகுதி தி.மு.க., வேட்பாளர் பொன்முடி, அரகண்டநல்லுார் பள்ளிவாசலில் தொழுகை முடித்துவிட்டு வந்த முஸ்லிம்கள் மற்றும் கொல்லுார், புத்துார், மணம்பூண்டி கிராமங்களில் உதயசூரியன் சின்னத்திற்கு ஓட்டு கேட்டு பிரசாரம் செய்தபோது பேசியதாவது:தி.மு.க., தலைவர் ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்றதும், மகளிருக்கான மாதம் ஆயிரம் ரூபாய், இலவச பஸ் பாஸ், காஸ் சிலிண்டர்க்கு நுாறு ரூபாய் மானியம் உள்ளிட்ட தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் முழுமையாக நிறைவேற்றப்படும். சொல்வதை செய்பவர் தான் ஸ்டாலின்.திருக்கோவிலுார் தொகுதியில் உள்ள பள்ளிகளின் தரம் உயர்த்தப்படும். சிறந்த கல்வியை ஏற்படுத்திக் கொடுக்கும் வகையில் கலை அறிவியல் கல்லுாரி துவங்கப்படும். இளைஞர்களுக்கு அரசு வேலை கிடைக்க ஏதுவாக இலவச பயிற்சி மையம் ஏற்படுத்தப்படும்.தொகுதியில் உள்ள அனைத்து நீர் நிலைகளை மேம்படுத்தி விவசாயம் பாதுகாக்கப்படும். மணல் மாட்டு வண்டி தொழிலாளர்கள் மீதான வழக்குகள் உரிய விசாரணை நடத்தப்பட்டு அதில் இருந்து விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும். அரகண்டநல்லூர் மார்க்கெட் கமிட்டியில் முறைகேடுகள் முழுமையாக களையப்படும் என்றார்.இவ்வாறு அவர் பேசினார்.மாவட்ட துணைச் செயலாளர் முருகன், காங்., சிறுபான்மை பிரிவு மாநில துணைத் தலைவர் வாசிம் ராஜா, அக்பர், தி.மு.க., ஒன்றிய செயலாளர்கள் தங்கம், பிரபு, ரவிச்சந்திரன், விஸ்வநாதன் மற்றும் கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X