சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பல்லடம் தொகுதியில் பண பட்டுவாடா 'ஜோர்'

Added : ஏப் 03, 2021
Share
Advertisement
பல்லடம்:பல்லடம் தொகுதியில், அ.தி.மு.க., - ம.தி.மு.க., வேட்பாளர்களிடம் கடும் போட்டி நிலவுகிறது. அ.ம.மு.க., - ம.நீ.ம., - நாம் தமிழர் கட்சியினரும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.இந்நிலையில், தொகுதிக்குள், கட்சியினர், கடைசி நேர பணப்பட்டுவாடாவில் இறங்கியுள்ளனர். அதிகாரிகள், எப்படியாவது பண பட்டுவாடாவை தடுத்துவிடலாம் என்ற நோக்கத்துடன், ரோடு ரோடாக நின்று கள ஆய்வு
 பல்லடம் தொகுதியில் பண பட்டுவாடா 'ஜோர்'

பல்லடம்:பல்லடம் தொகுதியில், அ.தி.மு.க., - ம.தி.மு.க., வேட்பாளர்களிடம் கடும் போட்டி நிலவுகிறது. அ.ம.மு.க., - ம.நீ.ம., - நாம் தமிழர் கட்சியினரும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.இந்நிலையில், தொகுதிக்குள், கட்சியினர், கடைசி நேர பணப்பட்டுவாடாவில் இறங்கியுள்ளனர். அதிகாரிகள், எப்படியாவது பண பட்டுவாடாவை தடுத்துவிடலாம் என்ற நோக்கத்துடன், ரோடு ரோடாக நின்று கள ஆய்வு மேற்கொள்கின்றனர்.ஆனால், அதிகாரிகளுக்கு கண்ணாமூச்சி காட்டி விட்டு, வீடு தோறும், 500 - , 1, 000 ரூபாய் வரை பணப்பட்டுவாடா நடந்து வருவதாக கூறப்படுகிறது.இதற்காக, மகளிர் குழு உள்ளிட்ட பிரத்யேக குழுக்கள் பயன்படுத்தப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. தேர்தலுக்கு இன்னும் ஒரு நாள் மட்டுமே உள்ளதால், அதிகாரிகள் கண்களில் விளக்கெண்ணெய் ஊற்றி கள ஆய்வு மேற்கொள்ள வேண்டியது அவசியம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X