தயார் நிலையில், ஓட்டுப்பதிவு இயந்திரம்: நாளை மறுநாள் தேர்தல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தயார் நிலையில், ஓட்டுப்பதிவு இயந்திரம்: நாளை மறுநாள் தேர்தல்

Added : ஏப் 03, 2021
Share
திருப்பூர்:திருப்பூர் மாவட்டத்தில், 297 மண்டலங்களுக்கும், ஓட்டுப்பதிவு இயந்திரங்களை எடுத்துச்செல்ல, சரக்கு வாகனங்கள் ஜி.பி.எஸ்., பொருத்தி தயார்நிலையில் உள்ளன.திருப்பூர் மாவட்டத்தில் உள்ள, எட்டு சட்டசபை தொகுதிகள், நிர்வாக வசதிக்காக, 297 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. திருப்பூர் வடக்கு மற்றும் தாராபுரத்தில், 40; பல்லடத்தில், 39; உடுமலை, 39; காங்கயத்தில், 38; அவிநாசி, 36;
 தயார் நிலையில், ஓட்டுப்பதிவு இயந்திரம்: நாளை மறுநாள் தேர்தல்

திருப்பூர்:திருப்பூர் மாவட்டத்தில், 297 மண்டலங்களுக்கும், ஓட்டுப்பதிவு இயந்திரங்களை எடுத்துச்செல்ல, சரக்கு வாகனங்கள் ஜி.பி.எஸ்., பொருத்தி தயார்நிலையில் உள்ளன.திருப்பூர் மாவட்டத்தில் உள்ள, எட்டு சட்டசபை தொகுதிகள், நிர்வாக வசதிக்காக, 297 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளன.
திருப்பூர் வடக்கு மற்றும் தாராபுரத்தில், 40; பல்லடத்தில், 39; உடுமலை, 39; காங்கயத்தில், 38; அவிநாசி, 36; மடத்துக்குளத்தில், 34; திருப்பூர் தெற்கில், 33 மண்டலங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.மண்டல தேர்தல் அலுவலர், உதவி அலுவலர் மற்றும் உதவியாளர் என, மூன்று பேர் கொண்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்தல் அலுவலரிடம் பெறும் ஓட்டுப்பதிவு இயந்திரம் மற்றும் பொருட்களை, ஓட்டுச்சாவடியில் ஒப்படைப்பது;ஓட்டுப்பதிவு கண்காணிப்பு, ஓட்டுப்பதிவு முடிந்ததும், மீண்டும் ஓட்டுப்பெட்டிகள் மற்றும் பொருட்களை பெற்று, ஓட்டு எண்ணிக்கை மையத்தில் ஒப்படைப்பது வரை, மண்டல தேர்தல் குழுவின் பணியாகும்.
மண்டல குழுவுக்கு, ஜி.பி.எஸ்., பொருத்திய வாகனம் ஒதுக்கப்பட்டுள்ளது; ஓட்டுப்பதிவு இயந்திரத்தை எடுத்துச்செல்ல, நேற்று சரக்கு வாகனம் தயார்படுத்தப்பட்டது. ஜி.பி.எஸ்., பொருத்தியும், நிழல் கூடாரம் அமைத்தும் வாகனங்கள் தயார் செய்யப்பட்டுள்ளன.திருப்பூர் சிக்கண்ணா கல்லுாரி வளாகத்தில், திருப்பூர் வடக்கு மற்றும் தெற்கு தொகுதிகளுக்கான வாகனங்கள் தயார்படுத்தும் பணி நடந்தது.
தேர்தல் அலுவலர்கள் கூறுகையில், 'வரும் 5ம் தேதி (நாளை) காலை, ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், ஓட்டுச்சாவடிக்கு கொண்டு செல்லப்படும். அதற்காக, மாவட்டத்தில், 300 வாகனங்கள் தயார்படுத்தப்பட்டுள்ளன,' என்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X