பொது செய்தி

தமிழ்நாடு

தேர்தல் பணியில் 6,276 ஊழியர்கள்

Added : ஏப் 03, 2021
Share
Advertisement
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நான்கு சட்டசபை தொகுதியில் உள்ள 1,569 ஓட்டுசாவடிகளில் 6,276 பேர் பணிபுரிகின்றனர். அதேபோல், அவசர தேவைக்காக 1,252 பேர் கூடுதலாக தயார் நிலையில் உள்ளனர்.கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டசபை தொகுதிகளில் ஓட்டுசாவடி மையங்களுக்கான அலுவலர்கள், இறுதிகட்டமாக மூன்றாவது சுழற்சி முறையில் கணினி மூலம் ஒதுக்கீடு செய்யும் பணிகள்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நான்கு சட்டசபை தொகுதியில் உள்ள 1,569 ஓட்டுசாவடிகளில் 6,276 பேர் பணிபுரிகின்றனர். அதேபோல், அவசர தேவைக்காக 1,252 பேர் கூடுதலாக தயார் நிலையில் உள்ளனர்.கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டசபை தொகுதிகளில் ஓட்டுசாவடி மையங்களுக்கான அலுவலர்கள், இறுதிகட்டமாக மூன்றாவது சுழற்சி முறையில் கணினி மூலம் ஒதுக்கீடு செய்யும் பணிகள் நேற்று நடந்தது.கலெக்டர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு, கலெக்டர் கிரண்குராலா தலைமை தாங்கினார்.கள்ளக்குறிச்சி மற்றும் சங்கராபுரம் தொகுதிகளின் பொது பார்வையாளர் சந்திரசேகர் வாலிம்பே, உளுந்துார்பேட்டை மற்றும் ரிஷிவந்தியம் தொகுதிகளின் பொது பார்வையாளர் இந்து மல்ஹோத்ரா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டசபை தொகுதிகளிலும் மொத்தம் 1,569 ஓட்டுசாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஓட்டுசாவடிக்கும் ஒரு தலைமை அலுவலர், ஓட்டுசாவடி அலுவலர் நிலை-1, நிலை-2, நிலை-3 என ஒரு மையத்திற்கு 4 அலுவலர்கள் வீதம் பணிபுரிகின்றனர்.இதில், ஓட்டுசாவடி தலைமை அலுவலர், ஓட்டுசாவடி மையத்தின் பொறுப்பு அலுவலராக பணிபுரிகிறார். ஓட்டுசாவடி அலுவலர் நிலை-1 வாக்காளர் பட்டியலில் பெயர் சரிபார்ப்பது, அலுவலர் நிலை-2 இடது கை விரலில் மையிடும் பணி மற்றும் 17-ஏ பதிவேடான ஓட்டுபதிவு செய்வதை குறிக்கும் பதிவேடு பராமரிப்பது, அலுவலர் நிலை-3 ஓட்டுபதிவு இயந்திரம் கட்டுபாட்டு கருவிக்கு பொறுப்பு அலுவலராக பணிகளை மேற்கொள்கின்றனர்.உளுந்துார்பேட்டை தொகுதியில் 407 ஓட்டுசாவடிககளில் 1,628 அலுவலர்கள் பணிபுரிகின்றனர்.அவசரகால தேவைக்காக 324 பேர் கூடுதலாக உள்ளனர்.ரிஷிவந்தியம் தொகுதியில் 374 ஓட்டுசாவடிகளில் 1,496 அலுவலர்கள் பணிபுரிகின்றனர். கூடுதலாக 300 பேர் உள்ளனர்.சங்கராபுரம் தொகுதியில், 372 ஒட்டுசாவடிகளில் 1,488 அலுவலர்கள் பணிபுரிகின்றனர். கூடுதலாக 296 பேர் உள்ளனர். கள்ளக்குறிச்சி தொகுதியில், 416 ஓட்டுசாவடிகளில் 1,664 அலுவலர்கள் பணிபுரிகின்றனர்.அவசரகால தேவைக்காக 332 பேர் கூடுதலாக உள்ளனர்.தேர்தலையொட்டி மாவட்ட நிர்வாகம் சார்பில் அனைத்து வகையான முன்னேற்பாடு பணிகள் தீவிரப்படுத்தப்படுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X