பொது செய்தி

தமிழ்நாடு

நான் வெளியூரை சேர்ந்தவன் அல்ல பா.ம.க., வேட்பாளர் ராஜா விளக்கம்

Added : ஏப் 03, 2021
Share
Advertisement
நான் வெளியூரை சேர்ந்தவன் அல்ல, தொகுதியை சேர்ந்த முனிவாழை தான் சொந்த ஊர் என சங்கராபுரம் பா.ம.க., வேட்பாளர் டாக்டர் ராஜா கூறியுள்ளார்.சங்கராபுரம் தொகுதியில், அ.தி.மு.க., கூட்டணியில் போட்டியிடும் பா.ம.க., வேட்பாளர் டாக்டர் ராஜா நேற்றைய பிரசாரத்தின் போது கூறியதாவது:சங்கராபுரம் தொகுதி பின் தங்கிய நிலையில் உள்ளது. நான் வெற்றி பெற்றதும், தொகுதியின் வளர்ச்சிக்காக தொழிற்சாலை

நான் வெளியூரை சேர்ந்தவன் அல்ல, தொகுதியை சேர்ந்த முனிவாழை தான் சொந்த ஊர் என சங்கராபுரம் பா.ம.க., வேட்பாளர் டாக்டர் ராஜா கூறியுள்ளார்.சங்கராபுரம் தொகுதியில், அ.தி.மு.க., கூட்டணியில் போட்டியிடும் பா.ம.க., வேட்பாளர் டாக்டர் ராஜா நேற்றைய பிரசாரத்தின் போது கூறியதாவது:சங்கராபுரம் தொகுதி பின் தங்கிய நிலையில் உள்ளது. நான் வெற்றி பெற்றதும், தொகுதியின் வளர்ச்சிக்காக தொழிற்சாலை அமைத்து வேலைவாய்ப்பு ஏற்படுத்துவேன், ஆண்டுதோறும் இலவச மருத்துவம் மற்றும் வேலைவாய்ப்பு முகாம் நடத்துவேன்.சங்கராபுரம் அரசு மருத்துவமனை தரம் உயர்த்துவேன். மூரார்பாளையத்தில் புதிய அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்கப்படும். கல்வராயன்மலை பகுதி மக்களுக்கு பட்டா வழங்கவும், தார் சாலை அமைக்க நடவடிக்கை எடுப்பேன். கோமுகி அணையை துார்வாருதல் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்துவேன்.தொகுதியில் போட்டியிடும் எதிர்கட்சியினர், என்னை வெளியூரை சேர்ந்தவர் என பொய் பிரசாரம் செய்து வருகின்றனர்.சங்கராபுரம் தாலுகாவிற்குட்பட்ட முனிவாழை கிராமம் தான் எனது சொந்த ஊர். பொருளாதாரத்தில் பின் தங்கிய விவசாய குடும்பத்தில் பிறந்து, கஷ்டபட்டு படித்து டாக்டராகி உள்ளேன்.சிகிச்சைக்காக வரும் ஏழை, எளியவர்களுக்கு மருத்துவ சேவை புரிந்துள்ளேன். கொரோனா ஊரடங்கின் போது, என்னால் முடிந்த உதவிகளை மக்களுக்கு செய்துள்ளேன். தி.மு.க., வேட்பாளர், ஏற்கனவே பலமுறை எம்.எல்.ஏ.,வாக இருந்தும் எதுவும் செய்யவில்லை. தேர்தலின் போது மட்டும் மக்களை சந்தித்து கவர்ச்சி வாக்குறுதிகளை கூறி, பொய்பிரசாரம் செய்து வருகின்றனர். இவர்களை நம்பி ஏமாற வேண்டாம்.இவ்வாறு வேட்பாளர் ராஜா கூறினார்.

-நமதுநிருபர்-

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X