அரசியல் செய்தி

தமிழ்நாடு

வாக்காளர்களுக்கு 'பட்டுவாடா' துவக்கம் ; ரோந்து பணியை தீவிரப்படுத்த உத்தரவு

Added : ஏப் 03, 2021
Share
Advertisement
தேர்தல் கமிஷன் கண்காணிப்பை மீறி, வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யும் பணியை, அரசியல் கட்சிகள் நேற்று துவக்கின. பணப் பட்டுவாடாவை தடுக்க, ரோந்து பணியை தீவிரப்படுத்த, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. தமிழக சட்டசபை பொதுத் தேர்தல், கன்னியாகுமரி லோக்சபா இடைத்தேர்தல், வரும், 6ம் தேதி நடக்க உள்ளது. தேர்தல் பிரசாரம், இன்று இரவுடன் நிறைவடைகிறது.வாடிக்கை தமிழகத்தில்,

தேர்தல் கமிஷன் கண்காணிப்பை மீறி, வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யும் பணியை, அரசியல் கட்சிகள் நேற்று துவக்கின. பணப் பட்டுவாடாவை தடுக்க, ரோந்து பணியை தீவிரப்படுத்த, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.

தமிழக சட்டசபை பொதுத் தேர்தல், கன்னியாகுமரி லோக்சபா இடைத்தேர்தல், வரும், 6ம் தேதி நடக்க உள்ளது. தேர்தல் பிரசாரம், இன்று இரவுடன் நிறைவடைகிறது.வாடிக்கை தமிழகத்தில், எந்த தேர்தல் நடந்தாலும், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் வழங்குவது, வாடிக்கையாக உள்ளது. இதை தடுக்க, தேர்தல் கமிஷனும், பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இவை அனைத்து தேர்தலிலும், பயனற்றதாகவே முடிகிறது. பணப் பட்டுவாடாவை தடுக்க, அனைத்து தொகுதிகளிலும், பறக்கும் படை, நிலை கண்காணிப்பு குழுவை, தேவைக்கேற்ப அதிகமாக நியமிக்க, தேர்தல் கமிஷன் அனுமதி வழங்கி உள்ளது.மேலும், மாநிலத்திற்கு இரண்டு கூடுதல் செலவினப் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டனர். வருமான வரித்துறையினர் உஷார்படுத்தப்பட்டனர்.

அவர்களும் ஆங்காங்கே சோதனை நடத்தினர். ஆனால், அவர்களின் கண்காணிப்பை மீறி, அரசியல் கட்சியினர் தொகுதிகளுக்கு பணத்தை கடத்தினர்.தொகுதிக்கு வந்து சேர்ந்த பணத்தை, கட்சி நிர்வாகிகளிடம் பகிர்ந்துஅளித்தனர். பணப் பட்டுவாடா செய்ய, 10 பேருக்கு ஒரு ஆள் நியமிக்கப்பட்டனர். அவர்கள் சத்தமின்றி, ஒவ்வொரு பகுதியிலும், நேற்று முதல் பட்டுவாடாவை துவக்கினர்.அ.தி.மு.க., மற்றும் தி.மு.க., சார்பில், ஓட்டுக்கு, 500 ரூபாய் வழங்கும் பணி துவக்கப்பட்டுள்ளது. ஒரு சில தொகுதிகளில், அ.ம.மு.க., வும் பட்டுவாடாவை துவக்கி உள்ளது.

ஏமாற்றம் : அரசியல் கட்சிகள், இம்முறை ஓட்டுக்கு, 1,000 ரூபாய் தருவர் என, தகவல் பரவி இருந்தது. ஆனால், 500 ரூபாய் மட்டும் வழங்கியதால், பணம் வாங்க தயாராக இருந்த வாக்காளர்கள் ஏமாற்றம் அடைந்தனர். பா.ஜ., தரப்பில், தேர்தல் செலவுகளை, நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதாக இருந்தால், நீங்கள் வழங்குங்கள் என, அ.தி.மு.க.,விடம் தெரிவித்துள்ளனர். ஆனால், பா.ஜ., போட்டியிடும் தொகுதிகளுக்கு, அ.தி.மு.க., தரப்பில், பணம் வழங்கப்படவில்லை எனப் புகார் எழுந்துள்ளது.

அதேபோல, சில அமைச்சர்கள் குறிப்பிட்ட தொகுதிகளை, கவனித்து கொள்வதாக, கட்சி தலைமையிடம் கூறிவிட்டு, நேற்று வரை கவனிக்கவில்லை என்றும், தகவல் வெளியாகி உள்ளது. மேலும், ஒரு சில தொகுதிகளில், கட்சியினர் அனைத்து பகுதி வாக்காளர்களுக்கும், பணம் வழங்காமல், தங்கள் கட்சியை சேர்ந்தவர்களுக்கும், குடிசைப் பகுதி களில் மட்டும், பண வினியோகித்தை துவக்கி உள்ளனர்.இன்றும், நாளையும் பணப் பட்டுவாடா, முழு வீச்சில் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதை தடுக்க, இரவிலும் ரோந்து செல்லும்படி, பறக்கும் படையினருக்கும், போலீசாருக்கும், தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X