ரூ.1,285 கோடி கடன் மோசடி ; ஐதராபாத் நிறுவனம் மீது வழக்கு

Added : ஏப் 03, 2021
Share
Advertisement
ஐதராபாத் : ஐதராபாதைச் சேர்ந்த ஒரு நிறுவனத்துக்கு எதிராக, 1,285 கோடி ரூபாய் வங்கி கடன் மோசடி தொடர்பாக, சி.பி.ஐ., வழக்கு பதிவு செய்துள்ளது. தெலுங்கானா மாநிலம், ஐதராபாதைச் சேர்ந்த ஒரு நிறுவனம், 2009 - 15 வரையிலான காலத்தில், திட்டப் பணிகளுக்காக, 'பேங்க் ஆப் பரோடா' வங்கியின் ஏற்பாட்டின் படி, 729 கோடி ரூபாய் கடன் பெற்று, வேறு வழிகளில் முறைகேடாக முதலீடு செய்துள்ளது. இது, வாராக் கடனாக, 1,285

ஐதராபாத் : ஐதராபாதைச் சேர்ந்த ஒரு நிறுவனத்துக்கு எதிராக, 1,285 கோடி ரூபாய் வங்கி கடன் மோசடி தொடர்பாக, சி.பி.ஐ., வழக்கு பதிவு செய்துள்ளது.

தெலுங்கானா மாநிலம், ஐதராபாதைச் சேர்ந்த ஒரு நிறுவனம், 2009 - 15 வரையிலான காலத்தில், திட்டப் பணிகளுக்காக, 'பேங்க் ஆப் பரோடா' வங்கியின் ஏற்பாட்டின் படி, 729 கோடி ரூபாய் கடன் பெற்று, வேறு வழிகளில் முறைகேடாக முதலீடு செய்துள்ளது. இது, வாராக் கடனாக, 1,285 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இது குறித்து வங்கி அளித்த புகாரின் அடிப்படையில் சி.பி.ஐ., விசாரணை நடத்தி, அந்த நிறுவனத்திற்கு சொந்தமான நான்கு இடங்களில் அதிரடி சோதனை நடத்தியது. இதில், சந்தேகத்திற்கிடமான வர்த்தகம் மேற்கொண்டது தொடர்பான முக்கிய ஆவணங்கள் சிக்கின.

இதைத் தொடர்ந்து, ஐதராபாத் நிறுவனம், அதன் இயக்குனர்கள், முறைகேடுக்கு துணை போன வங்கி மற்றும் அரசு ஊழியர்கள் உள்ளிட்டோர் மீது, சி.பி.ஐ., வழக்கு பதிவு செய்துள்ளது. தொடர்ந்து விசாரணை நடந்து வருவதாக சி.பி.ஐ., அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். ரூ.197 கோடிரியல் எஸ்டேட் துறையைச் சேர்ந்த, யூனிடெக் குழுமம், கார்னஸ்டி குழுமம் வாயிலாக, சட்ட விரோதமாக, 325 கோடி ரூபாய்க்கு, ஏராளமான அசையா சொத்துகளை வாங்கி உள்ளதாக, அமலாக்கத் துறை குற்றம்சாட்டியுள்ளது.

இதையடுத்து, சிக்கிம், கேரளா ஆகிய மாநிலங்களில், யூனிடெக் குழுமத்தின், 197 கோடி ரூபாய்க்கும் அதிக மதிப்புள்ள அசையா சொத்துகள் முடக்கப்பட்டுள்ளதாக அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X