சம்பவம் செய்தி

தமிழ்நாடு

உளுந்துார்பேட்டையில் லாரி கவிழ்ந்து விபத்து

Added : ஏப் 03, 2021
Share
Advertisement
உளுந்துார்பேட்டை: பெரம்பலுார் மாவட்டம் சிறுவாச்சூரை சேர்ந்தவர் செல்வராஜ் மகன் பாலமுருகன்,23; டிரைவரான இவர், கே.ஏ.01, ஏடி. 8579 பதிவெண் கொண்ட லாரியில் 22 டன் அட்டைப் பெட்டிகளை ஏற்றிக்கொண்டு நாமக்கல் பகுதியில் இருந்து அசாம் நோக்கி நேற்று புறப்பட்டார்.அவருடன் மாற்று டிரைவராக அதே பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் மகன் கார்த்திக் 20 உடன் சென்றார்.லாரி நேற்று மாலை 3:00 மணிக்க

உளுந்துார்பேட்டை: பெரம்பலுார் மாவட்டம் சிறுவாச்சூரை சேர்ந்தவர் செல்வராஜ் மகன் பாலமுருகன்,23; டிரைவரான இவர், கே.ஏ.01, ஏடி. 8579 பதிவெண் கொண்ட லாரியில் 22 டன் அட்டைப் பெட்டிகளை ஏற்றிக்கொண்டு நாமக்கல் பகுதியில் இருந்து அசாம் நோக்கி நேற்று புறப்பட்டார்.அவருடன் மாற்று டிரைவராக அதே பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் மகன் கார்த்திக் 20 உடன் சென்றார்.லாரி நேற்று மாலை 3:00 மணிக்க உளுந்துார்பேட்டை டோல்கேட் அருகே நான்கு சாலை சந்திப்பு பகுதி வந்தபோது, லாரி கட்டுப்பாட்டை இழந்து பேரிகார்டு மீது மோதி, சாலையில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது.இந்த விபத்தில் டிரைவர்கள் இருவரும் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர். அவர்களை போலீசார் மீட்டு, சிகிச்சைக்காக உளுந்துார்பேட்டை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும், இதுகுறித்து உளுந்துார்பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X