விருகாவூர் கிராம சமுதாய கூடம் பயன்பாட்டிற்கு வருமா? | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

விருகாவூர் கிராம சமுதாய கூடம் பயன்பாட்டிற்கு வருமா?

Added : ஏப் 03, 2021
Share
கள்ளக்குறிச்சி,: விருகாவூர் கிராமத்தில் கட்டபட்டுள்ள சமுதாய கூடத்தை பராமரித்து, பயன்பாட்டுக்குக் கொண்டுவர பொது மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.கள்ளக்குறிச்சி அடுத்த விருகாவூர் கிராமம் கூத்தக்குடி சாலையில், ஜவகர்வேலை வாய்ப்பு திட்டத்தில் சமுதாயக்கூடம் கட்டப்பட்டது. இதில், உணவு சாப்பிடுவதற்கான அறைகள், மின் விளக்குகள், குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அனைத்து வசதிகளும்

கள்ளக்குறிச்சி,: விருகாவூர் கிராமத்தில் கட்டபட்டுள்ள சமுதாய கூடத்தை பராமரித்து, பயன்பாட்டுக்குக் கொண்டுவர பொது மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.கள்ளக்குறிச்சி அடுத்த விருகாவூர் கிராமம் கூத்தக்குடி சாலையில், ஜவகர்வேலை வாய்ப்பு திட்டத்தில் சமுதாயக்கூடம் கட்டப்பட்டது. இதில், உணவு சாப்பிடுவதற்கான அறைகள், மின் விளக்குகள், குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் உள்ளன.இருப்பினும், இந்த சமுதாயக்கூடம் மக்கள் பயன்பாட்டிற்கு திறந்த விடாமல், பூட்டியே வைக்கப்பட்டுள்ளது. இதனால், பல லட்சம் செலவில் கட்டப்பட்ட சமுதாயக்கூடம் பயன்பாடின்றி பாழாகி வருகிறது.எனவே, பயனற்று பூட்டிக் கிடக்கும் சமுதாய கூடத்தை திறந்து மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். .

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X