திருக்கோவிலுார்,: அதிகார துஷ்பிரயோகம் செய்யக் கூடியவர்கள்தான் தி.மு.க., வினர் என பா.ஜ., ஊடகப்பிரிவு நாராயணன் திருப்பதி கூறினார்.திருக்கோவிலுார் தொகுதியில் போட்டியிடும் பா.ஜ., வேட்பாளர் கலிவரதனை ஆதரித்து கிராமங்களில் பிரசாரம் மேற்கொண்ட கட்சியின் ஊடகப்பிரிவு நாராயணன் திருப்பதி நிருபர்களிடம் கூறியதாவது.கடந்த சில தினங்களாக தி.மு.க., தலைவர் ஸ்டாலின், அவரது மகன் உதயநிதி, ராசா, தயாநிதிமாறன் உள்ளிட்ட தி.மு.க.,வினர் பெண்களை மிக மோசமாக விமர்சித்து வருகின்றனர். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.அவர்களின் வழியில் வந்த பொன்முடி இத்தொகுதியில் போட்டியிடுகிறார். அவர், இந்துக்களுக்கு எதிரானவர் மட்டுமல்ல செம்மண் குவாரி உள்ளிட்ட பல்வேறு ஊழல் வழக்கு மற்றும் சைதாப்பேட்டையில் அரசு இடத்தை அபகரித்த வழக்குகளை சந்தித்து கொண்டிருக்கிறார்.இந்த வழக்குகள் எல்லாம் எம்.எல்.ஏ., மற்றும் எம்.பி.,க்களுக்கான சிறப்பு நீதிமன்றத்திற்கு மாறியுள்ளது. வெகு விரைவில் அதற்கான தீர்ப்பு வரும். உறுதியாக அவர் தண்டிக்கப்படுவார். இப்படிப்பட்ட சூழலில் பொன்முடி எம்.எல்.ஏ., ஆனால், அதிகபட்சம் 6 மாதம் அல்லது ஓராண்டிற்குள் இடைத்தேர்தல் வரும். அதற்கான போதுமான ஆதாரங்களை உரிய அதிகாரிகள் வாக்குமூலமாக கொடுத்துள்ளனர்.எனவே பா.ஜ., வேட்பாளர் கலிவரதனுக்கு மக்கள் ஆதரவளிக்க வேண்டும்.இவ்வாறு நாராயணன் திருப்பதி கூறினார்.பேட்டியின்போது, மாநிலச் செயலாளர் கார்த்தியாயினி, தொகுதி பொறுப்பாளர் கார்த்திகேயன், மாநில செயற்குழு உறுப்பினர் தியாகராஜன், மாவட்ட செயலாளர் சுகுமார், மாவட்ட துணைத் தலைவர் சதாசிவம் உடனிருந்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE