விருத்தாசலம்: விருத்தாசலம் சட்டசபை தொகுதியில் அ.ம.மு.க., கூட்டணியில் போட்டியிடும் தே.மு.தி.க., வேட்பாளர் பிரேமலதா, வடக்கு, தெற்கு ஒன்றிய ஊராட்சிகளில் பிரசாரம் செய்தார்.அப்போது, மாவிடந்தல் ஊராட்சியில் வயல்வெளியில் பணியில் ஈடுபட்டிருந்த பெண்களிடம் குறைகளைக் கேட்டறிந்தார். மூடிக்கிடக்கும் தனியார் சர்க்கரை ஆலைகளை திறக்கவும், கரும்பு விவசாயிகள் நிலுவைத் தொகையை முழுவதுமாக பெற்றுத்தர நடவடிக்கை எடுப்பேன். விவசாயிகளின் விளைபொருட்களுக்கு ஆதார விலை கிடைக்க சட்டசபையில் குரல் கொடுப்பேன்.தொகுதியில் விவசாயிகளின் பிரச்னைகள் அனைத்தையும் தீர்த்து வைப்பேன் என உறுதியளித்தார்.தொடர்ந்து, பெண்களுக்கு சால்வை அணிவித்து, தனக்கு ஓட்டு போடும்படி கேட்டுக் கொண்டார்.பின்னர், மங்கலம்பேட்டையில் வீடு வீடாகச் சென்று, ஓட்டு சேகரித்தார். சின்னவடவாடி, பெரியவடவாடி ஊராட்சிகளில் திறந்தவேனில் நின்றபடி பிரசாரம் செய்தார். தொகுதி பொறுப்பாளர் ராஜ், ஒன்றிய செயலாளர்கள் செம்பை, ஜெயக்குமார், அ.ம.மு.க., கோவிந்தராஜ், கிருஷ்ணன், நிர்வாகிகள் வடவாடி வெங்கடேசன், கண்ணன், வெங்கடேசன், விஜயகுமார், ராஜிவ்காந்தி, முன்னாள் கவுன்சிலர் சரவணன் உட்பட பலர் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE