பொது செய்தி

தமிழ்நாடு

பழனிசாமி மீண்டும் முதல்வராக வேண்டும்: அ.தி.மு.க., வேட்பாளர் செல்வி ராமஜெயம் பேச்சு

Added : ஏப் 03, 2021
Share
Advertisement
வடலுார்: குறிஞ்சிபாடி தொகுதி அ.தி.மு.க., வேட்பாளர் செல்வி ராமஜெயம் பூண்டியாங்குப்பம், சங்கொலிக்குப்பம் உட்பட பல்வேறு கிராமங்களில் தீவிர ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டார்.அப்போது அவர் பேசுகையில், 'நான் 10 ஆண்டுகள் பேரூராட்சி தலைவராகவும், 2 முறை எம்.எல்.ஏ.,வாகவும், அமைச்சராகவும் இருந்துள்ளேன். தமிழகத்தில் 4 ஆண்டு காலம் சிறப்பாக ஆட்சி செய்த முதல்வர் பழனிசாமி மீண்டும் முதல்வராக

வடலுார்: குறிஞ்சிபாடி தொகுதி அ.தி.மு.க., வேட்பாளர் செல்வி ராமஜெயம் பூண்டியாங்குப்பம், சங்கொலிக்குப்பம் உட்பட பல்வேறு கிராமங்களில் தீவிர ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டார்.அப்போது அவர் பேசுகையில், 'நான் 10 ஆண்டுகள் பேரூராட்சி தலைவராகவும், 2 முறை எம்.எல்.ஏ.,வாகவும், அமைச்சராகவும் இருந்துள்ளேன். தமிழகத்தில் 4 ஆண்டு காலம் சிறப்பாக ஆட்சி செய்த முதல்வர் பழனிசாமி மீண்டும் முதல்வராக வரவேண்டும்.யாரும் குறை சொல்ல முடியாத அளவிற்கு ஆட்சி நடத்தியுள்ளார். உங்கள் பிரச்னைகளை சட்ட சபையில் பேச எனக்கு வாய்ப்பு தாருங்கள்' என்றார்.மாவட்ட அவைத்தலைவர் முத்துலிங்கம், ஒன்றிய செயலாளர்கள் கோவிந்தராஜ், பாஷ்யம், குறிஞ்சிப்பாடி பேரூராட்சி செயலாளர் ஆனந்த பாஸ்கர், முன்னாள் ஒன்றிய செயலாளர் ரஜினிகாந்த், முன்னாள் தொகுதி செயலாளர் வெங்கடாஜலபதி, மாவட்ட கவுன்சிலர் சண்முகசுந்தரம், பா.ம.க., சுரேஷ், செல்வம் பா.ஜ., அக்ரி கிருஷ்ணமூர்த்தி, ரவிச்சந்திரன் உட்பட பலர் உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X