அசாம் அமைச்சருக்கு பிரசாரம் செய்ய தடை நேரம் குறைப்பு

Updated : ஏப் 04, 2021 | Added : ஏப் 04, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
புதுடில்லி : அசாமைச் சேர்ந்த, பா.ஜ., அமைச்சர் ஹிமந்தா பிஸ்வ சர்மா, பிரசாரம் செய்ய விதிக்கப்பட்டிருந்த, 48 மணி நேர தடையை, 24 மணி நேரமாக, தேர்தல் கமிஷன் குறைத்துள்ளது.அசாமில், முதல்வர் சர்பானந்த சோனாவால் தலைமையில், பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இந்த மாநில சட்டசபைக்கு, இரண்டு கட்ட தேர்தல் முடிந்து, மூன்றாவது மற்றும் இறுதி கட்ட தேர்தல், 6ம் தேதி நடக்கிறது.மாநில அமைச்சரும், பா.ஜ.,

புதுடில்லி : அசாமைச் சேர்ந்த, பா.ஜ., அமைச்சர் ஹிமந்தா பிஸ்வ சர்மா, பிரசாரம் செய்ய விதிக்கப்பட்டிருந்த, 48 மணி நேர தடையை, 24 மணி நேரமாக, தேர்தல் கமிஷன் குறைத்துள்ளது.



latest tamil news



அசாமில், முதல்வர் சர்பானந்த சோனாவால் தலைமையில், பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இந்த மாநில சட்டசபைக்கு, இரண்டு கட்ட தேர்தல் முடிந்து, மூன்றாவது மற்றும் இறுதி கட்ட தேர்தல், 6ம் தேதி நடக்கிறது.மாநில அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான ஹிமந்தா பிஸ்வ சர்மா, பிரசாரத்தில் ஈடுபட்ட போது, 'போடோலாந்து மக்கள் முன்னணி கட்சி தலைவர் ஹக்ராமா மொஹிலாரியை சிறையில் அடைப்போம்' என மிரட்டியதாக, தேர்தல் கமிஷனில், காங்கிரஸ் புகார் மனு அளித்தது.


latest tamil news



இதை விசாரித்த தேர்தல் கமிஷன், அமைச்சர் ஹிமந்தா, 48 மணி நேரம் பிரசாரம் மேற்கொள்ள தடை விதித்து, நேற்று முன்தினம் உத்தரவிட்டது. இந்நிலையில், தேர்தல் கமிஷனிடம், ஹிமந்தா மன்னிப்பு கேட்டு கடிதம் எழுதினார். இதை ஏற்ற தேர்தல் கமிஷன், அவருக்கு விதிக்கப்பட்டிருந்த, 48 மணி நேர தடையை, 24 மணி நேரமாக குறைத்து, நேற்று உத்தரவிட்டது.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Thulasingam Jayaram Pillai - Chenai,இந்தியா
04-ஏப்-202111:51:50 IST Report Abuse
Thulasingam Jayaram Pillai வடக்குனா ஓகே அண்ணா தெற்குனா நாட் ஓகேவா ?
Rate this:
Cancel
Raman - kottambatti,இந்தியா
04-ஏப்-202107:08:48 IST Report Abuse
Raman வாயை வச்சிக்கிட்டு சும்மா இருந்தால் தானே? அங்கே தேர்தல் ஆணையம் என்ன சரியில்லையோ ?.. பாஜககாரன் என்றான் எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாதே.. எதிர்கட்சிக்கு மட்டும் தான் நடவடிக்கை எல்லாமே.
Rate this:
Cancel
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
04-ஏப்-202101:36:41 IST Report Abuse
தமிழவேல் நம்ம ராஜாதான் மன்னிப்பும் கேட்டுட்டாரே... இவருக்கும் 24 மணி தானே ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X