நடுவீரப்பட்டு: தேர்தலையொட்டி நடுவீரப்பட்டு பகுதியில் துணை ராணுவத்தினர் மற்றும் போலீசார் கொடி அணிவகுப்பு ஊர்வலம் நடத்தினர்.வரும் 6ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் எவ்வித அசம்பாவிதமும் இல்லாமல் தேர்தலை நடத்திட தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. இதனால் காவல் துறையினர் மற்றும் துணை ராணுவத்தினர் அனைத்து தொகுதிகளுக்கும் வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.இந்நிலையில், பொதுமக்கள் பயமின்றி ஓட்டளிக்க கொடி அணிவகுப்பு ஊர்வலம் நடுவீரப்பட்டு, பாலுார், பத்திரக்கோட்டை பகுதிகளில் நடந்தது. ஊர்வலத்தில் டி.எஸ்.பி., ராஜலட்சுமி தலைமையில் இன்ஸ்பெக்டர் கோபாலகிருஷ்ணன், சப் இன்ஸ்பெக்டர் விஜயபாஸ்கர், ஜவஹர்சிங் மற்றும் போலீசார், துணை ராணுவத்தினர் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE